June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி அருகே மின் இணைப்புக்கு வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது

1 min read

Electricity Board employee arrested for taking bribe of Rs.4 thousand to provide electricity connection near Tenkasi

11.10.2023
தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் பகுதியில் புதிய வீட்டிற்கு மின்இணைப்பு வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியரை ஊழல் தடுப்பு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

லஞ்சம்

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பாண்டியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி என்பவரது மகன் அருணாசலம் (வயது 28). இவர் தனக்கு சொந்தமான இடத்தில் புதிதாக வீடு கட்டி. உள்ளார்.இந்த வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு கடந்த
28;ம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இருந்தார்.

இந்த விண்ணப்பத்தை
சேர்ந்தமரம் மின்வாரிய த்தில் போர்மேனாக பணி புரியும் பாம்புகோவில்சந்தை அருகே உள்ள வேட்டரம்பட்டி செக்கடி தெருவை சேர்ந்த ரத்தினம் என்பவர் சரிபார்த்தார். பின்னர் அவர், அருணாசலத்தை தொடர்புகொண்டு சேர்ந்தமரம் மின்வாரிய அலுவலகத்திற்கு வரும்படி கூறினார்.

அதன்படி அங்கு சென்ற அருணாசலத்திடம் மின்வாரிய ஊழியர் ரத்தினம் கூறியதன் பேரில் ஆன்லைனில் ரூ.25,500-ஐ கட்டினார். ஆனாலும் புதிய மின்சும்பம் அமைத்து மின்இணைப்பு கொடுப்பதற் காக தனக்கு ரூ.4 ஆயிரம் தனியாக தர வேண்டும் என்று ரத்தினம்
கேட்டுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அருணாசலம்
லஞ்சம் கொடுக்க விரும்பாமல் இதுபற்றி தென்காசி ஊழல் தடுப்பு
மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் அதிகாரிகள் ரசாயனம் தடவிய ரூ4 ஆயிரம் ரூபாய் பணத்தை அருணாசலத்திடம் கொடுத்து அனுப்பினர்.

நேற்று அருணாசலம் அந்தபணத்தை மின் வாரிய அலுவலகத்தில் இருந்த மின்வாரிய ஊழியர் ரத்தினத்திடம் கொடுத்த போது, அங்கு மறைந்து இருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை சூப்பிரண்டு பால்சுந்தர், தலைமை யிலான லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ் பெக்டா ஜெயஸ்ரீ, சப்-இன்ஸ் . பெக்டர் ரவி, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் தெய்வக்கனி அடங்கிய குழுவினர் கையும் களவுமாக பிடித்தனர். பின் னா ரத்தினத்தை அதிரடியாக கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *