தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டிற்கான ஏற்பாடுகளை மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்
1 min read
DMK M. K. Stalin personally visited the preparations for the Women’s Rights Conference
13.10.2023
தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டிற்கான ஏற்பாடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.
மாநாடு
தி.மு.க. மகளிரணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு சென்னையில் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னின்று நடத்தும் இந்த ‘மகளிர் உரிமை மாநாடு’ நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை மாலை 4.30 மணிக்கு பிரமாண்டமாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சென்னையில் நாளை நடைபெறும் தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டிற்கான ஏற்பாடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார். முதல்-அமைச்சருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் மற்றும் தி.மு.க. எம்.பி.கனிமொழி ஆகியோர் உடனிருந்தனர்.