அப்துல்கலாம் பிறந்த நாள்: ராமேஸ்வரத்தில் மினி மராத்தான் போட்டியை சோம்நாத் தொடங்கி வைத்தார்
1 min readAbdul Kalam’s birthday: Somnath inaugurated the mini marathon at Rameswaram
15.10.2023
அப்துல்கலாம் பிறந்த நாளையொட்டி ராமேஸ்வரத்தில் மினி மராத்தான் போட்டியை சோம்நாத் தொடங்கி வைத்தார்.
அப்துல்கலாம் பிறந்தநாள்
முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் 92வது பிறந்த நாளை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் மினி மாரத்தான் போட்டி நடந்தது. முன்னதாக அப்துல் கலாம் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மினி மாரத்தான் போட்டியை கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தலைவர் சோம்நாத் தொடங்கி வைத்தார். 21 கிமீ., ஆடவர் பிரிவில் புதுக்கோட்டை லட்சுமணன்
ஊட்டி வினோத் குமார், ரெங்கராஜ், மகளிர் பிரிவில் பேராவூரணி சுகன்யா, மணப்பாறை விஜயா வைஷ்ணவி, மனோன் மணி ஆகியோர் முதல் மூன்று இடம் பிடித்தனர். 5 கிமீ மகளிர் பிரிவில் சிவகங்கை அபிஸ்ரீ, கரூர் அனிதா, லலிதா, ஆடவர் பிரிவில் ராஜபாளையம் மாரி சரத், கன்னியாகுமரி அகில் ராம், ராமநாதபுரம் வசந்த் ஆகியோர் முதல் 3 இடம் பிடித்தனர்.
இவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. மினி மாரத்தான்
போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்று வழங்கப்பட்டது. நவாஸ் கனி எம்பி, முருகேசன் எம்எல்ஏ, எஸ்பி தங்கதுரை, வனக்காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலு, உதவி ஆட்சியர் சிவானந்தம், மண்டபம் யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கான், மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா, அப்துல் கலாம் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.