July 21, 2026

Seithi Saral

Tamil News Channel

சுரண்டையில் பெண் போலீசாரை மிரட்டியவர் கைது

1 min read

Man arrested for threatening woman police officer in Surandai

24.10.2023

தென்காசி அருகே சுரண்டையில் பெண் போலீசாரை மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் சுரண்டை காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலர்களாக பணியாற்றி வருபவர்கள் ராஜேஸ்வரி மற்றும் அன்பரசி. இவர்கள் இருவரும் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் முஸ்லிம் தொடக்கப்பள்ளி அருகில் ரோந்து சென்ற போது பாண்டி (எ) பாண்டியராஜ் என்ற நபர் அவர்களை வழிமறித்து இந்த தெரு வழியாக வரக்கூடாது. மீறி வந்தால் கல்லைக் கொண்டு எறிந்து கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து சுரண்டை காவல் நிலையத்தில் பெண் போலீஸ் ராஜேஸ்வரி புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மேனன் விசாரணை நடத்தி பெண் போலீசாருக்கு மிரட்டல் விடுத்து அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்த பாண்டி (எ) பாண்டியராஜன் (வயது 34) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *