September 18, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆலங்குளம் அருகே டாஸ்மாக் பார் மீது வெடிகுண்டு வீச்சு

1 min read

Bomb hurled at TASMAC bar near Alangulam

17/9/2026
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே களப்பாகுளத்தைச் சேர்ந்தவர் சவுந்திர பாண்டியன். இவர் ஊத்துமலை அருகே கீழக்கலங்கலில் இருந்து அமுதாபுரம் செல்லும் சாலையில் டாஸ்மாக் பார் ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று மாலை மது வாங்கிக்கொண்டு அங்கு காரில் வந்து இறங்கிய அண்ணாமலை புதூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் (வயது 26) மற்றும் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் பாருக்கு சென்று மது அருந்துவதற்கு தண்ணீர், கூல்டிரிங்ஸ் ஆகியவற்றை வாங்கினர்.

இதற்கு பார் ஊழியர் ரங்கராஜன் பணம் கேட்டுள்ளார். ஆனால் அரவிந்தன் மற்றும் நண்பர்கள் பணத்தை தர மறுத்துவிட்டனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அரவிந்த் மற்றும் அவரது நண்பர்கள் காரில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து வந்து பாரின் சுவரின் மீது வீசியெறிந்து விட்டு தப்பிச் சென்றனர். இதனால் பாரில் மது அருந்திக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.

இந்நிலையில் டாஸ்மாக் பார் மீது வெடிகுண்டு வீசியை கும்பலை ஞவலைவீசி தேடிவருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *