November 9, 2024

Seithi Saral

Tamil News Channel

தென்காசி- மறியலில் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் 150 பேர் கைது

1 min read

Tenkasi- 150 Satthunavu and Anganwadi workers arrested for picketing

27.10.2023
தென்காசியில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு – அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப் பினர் 150 பேர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரியும், அரசு துறை காலிப் பணியிடங் களில் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை காலம் முறை ஊதியம் வழங்கி பணி வழங்கிடவும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முழுவதும் நேற்று தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு தென்காசி மாவட்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் இன்று நடந்தது. இந்த போராட்டத்தின் போது மறியலில் ஈடுபட்ட சுமார் 150-க்கும் மேற்பட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற தவறினால் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் எனவும், வருகின்ற நவம்பர் மாதம் 25ஆம் தேதி திருச்சியில் வாழ்வா? சாவா? என்ற தலைப்பில் போராட்ட பிரகடன மாநில மாநாடு நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர். தொடர்ந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 150 பேர்களை தென்காசி காவல் துறையினர் கைது செய்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.