தென்காசி மாவட்டத்தில் ஆன்லைனை தவிர்த்து உள்ளூர் வியாபாரிகளை பாதுகாக்க புதிய அமைப்பு
1 min read
New System to Protect Local Traders Apart from Online in Tenkasi District
28.10.2023
தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் வியாபாரிகளை பாதுகாக்க பிசினஸ் டெவலப்மென்ட் அசோசியேசன் என்ற புதிய அமைப்பு துவங்கப்பட்டது.
உள்ளூர் வியாபாரிகள் வணிகம் காப்போம்.
ஆன்லைன், கார்ப்பரேட் வணிகம் தவிர்ப்போம்.
என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள, பிசினஸ் டெவலப்மெண்ட் அசோசியேசன் (பிடிஏ) என்ற நிறுவனத்தின், இரண்டாவது கூட்டம் தென்காசி வாய்க்கால் பாலம் அருகில் உள்ள, யோகா டவரில் வைத்து நேற்று நடைபெற்றது.
பிசினஸ் டெவலப்மெண்ட் அசோசியேசன் (பிடிஏ) நிறுவனத்தின், தென்மண்டல அமைப்பாளர் கட்டி அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் பலதரப்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
இது பற்றி அவர் கூறியதாவது,
தற்காலத்தில் ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது கார்ப்பரேட் கம்பெனிகளிடம் சென்று பொருட்கள் வாங்குவது அதிகரித்து வருகிறது இதனால் உள்ளூர் வியாபாரிகள் மிகவும் நலிவடைந்து வருகின்றனர்.
எனவே எங்களது நிறுவனம், ஐந்து கொள்கைகளை அடிப்படையாகக்கொண்டு செயல்பட உள்ளது.
ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
கார்ப்பரேட் கம்பெனிகளிடம் பொருட்கள் வாங்குவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
உள்ளூர் வியாபாரிகளிடம் பொருட்கள் வாங்க அனைவரும் முன்வர வேண்டும்.
வெளியூர் சென்று பொருட்கள் வாங்குவது, வெளியூர் கம்பெனிகளிடம் பொருட்கள் வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
சில்லறை வியாபாரிகள், தமிழகத்தைச் சார்ந்த மொத்த வியாபாரிகளிடம் பொருட்கள் வாங்க வேண்டும்.ஆகிய ஐந்து கொள்கைகளை அடிப்படை யாக கொண்டு செயல்படு கிறோம்.
உள்ளூர் வியாபாரிகளிடம் பொருட்கள் வாங்க வேண்டும் என்பதுதான் அடிப்படை நோக்கம். அப்போதுதான் நமது மாவட்டத்தில் பொருளாதார சுழற்சி ஏற்படும். மாவட்டம் வளர்ச்சி அடையும். இங்கு தொழில் செய்பவர்கள் வளர்ச்சி அடைவார்கள்.
உள்ளூர் வியாபாரிகளை தரம் உயர்த்த, பிசினஸ் கருத்தரங்குகள், மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் பிரச்சாரம்,போன்ற உதவிகள் செய்து வருகிறோம்.
தென்காசி மற்றும் தென் மாவட்டங்களைச் சார்ந்த வியாபாரிகள், தொழில் செய்பவர்கள், சேவை தொழிலில் ஈடுபடுபவர்கள்,
இதில் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கடையம் சேவாலயா சங்கிலி பூதத்தான், செல்காம் ரஹ்மான், தென்காசி முகமது அலி, ரிஷி, சாகுல் ஹமீது, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
One attachment
• Scanned by Gmail