June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் பணத்துக்காக கொலை செய்தவர் கைது

1 min read

The man who killed for money was arrested in Tenkasi

28.10.2023
தென்காசியில் பணத்துக்காக பரதேசியை கொலை செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர் மேலும் இருவரை வலை வீசி தேடி வருகிறார்கள்

தென்காசி யானை பாலம் படித்துறை அருகே கடந்த 24ந் தேதி பரதேசி ஒருவர் சாமி சிலையால் தலையில் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து தென்காசி காவல்நிலைய ஆய்வாளர் கே.எஸ். பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், முதற்கட்டமாக, உயிரிழந்த நபர் தென்காசி அருகே உள்ள மேலப்புலியூர் பகுதியை சேர்ந்த சங்கர நாராயணன் (வயது 55) என்பதும், அவர் பலரிடம் யாசகம் பெற்று அதில் வரும் வருமானத்தை வைத்து வாழ்ந்து வருவதும் தெரிய வந்தது.

தொடர்ந்து, அவரை கொலை செய்தது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். யானை பாலம் சிக்னல் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்பொழுது, மூன்று நபர்கள் படித்துறை பகுதியில் இருந்து வெளியே செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது, அந்த காட்சிகளில் பதிவான ஒரு நபர் தென்காசி காவல் நிலைய பகுதியில் உள்ள பழைய குற்றவாளியான முகமது அலி என்ற கஞ்சா அலி(வயது 36) என்பது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து, போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்திய போது, சங்கரநாராயணனை கொலை செய்தது நான் ன்தான் என முகமது அலி என்ற கஞ்சா அலி ஒப்புக்கொண்ட நிலையில், அவருக்கு உடந்தையாக அவரது நண்பர்களான சுடலை குமார் மற்றும் ரசாக் ஆகிய இருவரும் இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையின் போது, கஒஞ்சா பழக்கத்திற்கு அடிமையான 3 நபர்களும் கொலை நடந்த தினத்தன்று கடுமையான கஞ்சா போதை இருந்த நிலையில், மேலும் கஞ்சா வாங்குவதற்கு பணம் இல்லாமல் தென்காசி நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்துள்ளனர்.

இந்த நிலையில், யானை பாலம் பகுதியில் உள்ள படித்துறையில் சங்கரநாராயணன் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்த கஞ்சா போதை ஆசாமிகள் அவர் யாசகம் பெற்று வைத்திருந்த பணத்தை பறிக்க முயற்சி செய்துள்ளனர்.

அப்பொழுது, சுதாரித்துக் கொண்ட சங்கரநாராயணன் எழுந்து கூச்சலிடவே ஆத்திரமடைந்த முகமது அலி என்ற கஞ்சா அலி அருகில் இருந்த சாமி சிலையை எடுத்து சங்கரநாராயண னின் தலையில் போட்டுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே துடிதுடித்து சங்கரநாராய ணன் உயிரிழக்கவே, மூன்று பேரும் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, தற்போது கஞ்சா அலியை கைது செய்துள்ள போலீசார் அவருக்கு உடந்தையாக இருந்த சுடலை குமார் மற்றும் ராசாக் ஆகிய இருவரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *