October 12, 2024

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

1 min read

Welfare assistance to farmers in Tenkasi

28.10.2023
தென்காசி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை யில் நேற்று நடைபெற்றது.

மேலும் குருவிகுளம் வட்டார வேளாண்மை – உழவர் நலத்துறையினர், தென்காசி மற்றும் கீழப்பாவூர் வட்டார தோட்ட க்கலைத் துறையினர் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியினை தென்காசி மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்து பார்வை யிட்டார். இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

வேளாண்மை-உழவர் நலத்துறை மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் குருவிகுளம் வட்டாரத்தை சேர்ந்த விவசாயிக்கு நலத்திட்ட உதவியாக ரூ.2 ஆயிரம் மதிப்பில் மின்கல மருந்து தெளிப்பான் முழு மானியத்தில் கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.
தென்காசி வட்டார தோட்டக்கலைத் துறை யினர் சார்பில் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தென்னையில் ஊடு பயிராக காய்கறி சாகுபடி செய்வதற்கு ரூ.5 ஆயிரம் மானியத்தில் இடு பொருட்கள் வழங்கப் பட்டன.

தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் காய்கறி பரப்பு விரிவாக்கத்திற்காக பயனாளி ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் இடுபொ ருட்கள் மற்றும் காய்கறி நாற்றுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் முடிவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 277 மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் ரவிச்சந்திரன் அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் வேளா ண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) ஊமைத்துரை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளா ண்மை) கனகம்மாள், தோட்டக்கலை துறை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி, துணை இயக்குநர், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை சுப்பையா, உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) சங்கர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி மற்றும் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள், அனை த்து வட்டார தோட்ட க்கலை உதவி இயக்கு நர்கள், அனைத்து துறை அலுவ லர்கள், அனைத்து விவ சாய சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.