1-ந் தேதி கிராமசபைக்கூட்டம்- தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
1 min readGram Sabha meeting on 1st – Tenkasi district collector announcement
28.10.2023
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 01.11.2023 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.என்று மாவடட் ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி தென்காசி மாவட்ட ஆட்சித் துரை இரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 3-ன்படி 01.11:2023 உள்ளாட்சிகள் தினத்தன்று முற்பகல் 11.00 மணிக்கு தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கிராம சபை கூட்டத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மகளிர் சுய உதவி குழுக்களை கௌரவித்தல், வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், இணைய வழி வீட்டு வரி சொத்து வரி செலுத்துதல் மற்றம் இதர பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இந்த கிராம சபை கூட்டங்களில் கிராம ஊராட்சிகளின் அனைத்து பொதுமக்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று தென்காசி மாவட்ட துரை.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.