பொட்டல்புதூரில் இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
1 min readCommunity Reconciliation Council protest against Israel in Potalbutur.
29.10.2023
தென்காசி மாவட்டம்
கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் மேல பஸ் நிறுத்தம் அருகில் வைத்து, பாலஸ்தீனத்தில் போரில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் அரசை கண்டித்தும், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்திய அரசு, மற்றும் அமெரிக்க அரசை கண்டித்தும், சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சமூக நல்லிணக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப் பாளர் கட்டி அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, திமுக மாவட்ட பிரதிநிதி யாகூப், ஒன்றிய கவுன்சிலர் ஜஹாங்கீர், தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் சித்தீக், திமுக ஒன்றிய பொருளாளர் அஜீஸ் அகமது, தென்காசி மாவட்ட மகளிர் உதவும் சங்க செயலாளர் சலீம், ரவணசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் முகம்மது உசேன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புகாரி மீரா சாஹிப் ஆகியோர்,மஸ்ஜித் நூர் பள்ளிவாசல் செயலாளர் சிராஜ், ஜாக் அமைப்பின் மாவட்டத் துணைச் செயலாளர் சம்சுல் ஹூதா ஃபிர்தவ்ஸி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொட்டல்புதூர் சாகுல் ஹமீது ஆலிம், எஸ்.டி.பி.ஐ மாவட்ட பொதுச் செயலாளர் செய்யது மஹ்மூத், முதலியார்பட்டி பள்ளிவாசல் தலைவர் சையது முகமது, எஸ்டிபிஐ ஆலங்குளம் தொகுதி பொறுப்பாளர் அப்துல் மாலிக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில விவசாய அணி செயலாளர் தென்காசி முகமது அலி ஆகியோர் பேசினர்.
தமுமுக முதலியார்பட்டி கிளை தலைவர் காலித், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட மாணவர் அணி தலைவர் ரிபாய், இளைஞரணி பொறுப்பாளர் பீரப்பா,எஸ்டிபிஐ கடையம் வட்டார பொறுப்பாளர் செய்யது பாசில், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட துணை செயலாளர் பழக்கடை சுலைமான் ஆகியோர் கண்டன கோஷங்களை வாசித்தனர்.
ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட பொறுப்பாளர் அன்சர் வரவேற்றார். முடிவில் முதலியார்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாசில் அனைவருக்கும் நன்றி கூறினார்.
சமூக நல்லிணக்க கூட்டமைப்பு உறுப்பினர்கள் ரவணசமுத்திரம் ரிபாய் ஆலிம், பொட்டல்புதூர் பத்தாஹ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஆர்ப்பாட்டத்தில்
கலந்து கொண்டனர்.