கல்லிடைக்குறிச்சியில் டிரைவரை கொலை செய்த நண்பர்கள்
1 min readFriends who killed the driver in Kallidaikurichi
28.10.2023
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் பட்டப் பகலில் தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கார் டிரைவர்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி அகஸ்தியர் கோவில் சன்னதி தெருவை சார்ந்தவர் பூதத்தான் என்வரது மகன் பிரபு (வயது 31) இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது நண்பர் அதே ஊரைச் சேர்ந்த புது அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் மாயாண்டி ( 29) நேற்று மதியம் பிரபு மாயாண்டி மேலும் இரண்டு பேர் புது அம்மன் கோவில் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது பிரபு மாயாண்டி இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாயாண்டி மற்றும் உடன் இருந்த இருவரும் சேர்ந்து பிரபுவை அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் பிரபுவின் தலை துண்டிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த அம்பாசமுத்திரம் டிஎஸ்பி சதீஷ்குமார்,கல்லிடைக்குறி
ச்சி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தலை துண்டான நிலையில் கிடந்த பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய நிலையில் பிரபுவின் நண்பரான மாயாண்டி மற்றும் அவருடன் சேர்ந்து மேலும் 2 பேர்கள் பிரபுவை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியது தெரியவந்துள்ளது.
இந்தப் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய மாயாண்டி மற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.பட்டப் பகலில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் இந்த படுகொலை சம்பவம் நடைபெற்று இருப்பது அந்த பகுதியில் பெரும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.