July 22, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் மின்வேலியில் சிக்கி விவசாயி பலி

1 min read

Farmer dies after getting caught in electric fence in Tenkasi

30.10.2023
தென்காசி மேலகரம் அருகே உள்ள பாறைகுளம் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 56). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் பயிர்கள் பயிரிட்டிருந்தார். அதனை அடிக்கடி காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வந்தது.

இதனால் காட்டு பன்றிகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற முருகன் தனது தோட்டத்தை சுற்றிலும் மின்வேலி அமைத்துள்ளார். நேற்று மாலையில் தனது தோட்டத்திற்கு சென்ற முருகன் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் சந்தேகம் அடைந்து தோட்டத்திற்கு சென்று பார்த்துள்ளனர்.

அப்போது காட்டுப்பன்றிகளுக்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி முருகன் உயிரிழந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அறிந்த தென்காசி போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உயிரிழந்த விவசாயி முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *