மின் நிதி மேம்பாட்டு கழகத்தில் வருமான வரி அதிகாரிகள் சோதனை
1 min readIncome Tax Officers check on E-Financial Development Corporation
31/10/2023
சென்னையில் மின் நிதி மேம்பாட்டு கழகத்தில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
சோதனை
சென்னை மின்நிதி மேம்பாட்டு கழகத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனை நேற்று இரவிலும் நீடித்தது. இன்றும் நடைபெற்று வருகிறது.
15 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த ஆண்டு மின்நிதி மேம்பாட்டு கழகம் கட்டிய வருமான வரியை விட இந்த ஆண்டு மிகவும் குறைவாக வருமானவரி கட்டப்பட்டுள்ளது. இதனால் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்தே வருமான வரித்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆவணங்களை சரிபார்த்து ஆய்வு செய்தனர்.
இந்த ஆண்டு மின்நிதி மேம்பாட்டு கழகம் பெற்றுள்ள வருவாய் எவ்வளவு? அதில் முறையாக வரி கட்டப்பட்டுள்ளதா? என்பது போன்ற தகவல்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதன் மூலமாக வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதா? என்பது பற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் முடிவில்தான் வரி ஏய்ப்பு தொடர்பாக தகவல்கள் இருந்தால் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.