அடுக்குமாடி குடியிருப்பு மின் கட்டணம் குறைப்பு நாளை முதல் அமல்
1 min readElectricity tariff reduction for apartments will be effective from tomorrow
31.10.2023
சென்னை மாநகரம் மற்றும் பிற மாநகராட்சியையொட்டி உள்ள புறநகர் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் சிறு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் பொது பயன்பாட்டுக்கான மின் கட்டணமாக 1 யூனிட்டுக்கு ரூ. 8 வரை வசூலிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் பொது பயன்பாட்டுக்கான மின் கட்டணம் 1 யூனிட்டிற்கு 8 ரூபாயில் இருந்து 5 ரூபாய் 50 பைசாவாக குறைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி 10 வீடுகள் அல்லது அதற்கும் குறைவான, மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு புதிய கட்டணம் பொருந்தும்.
இந்த நிலையில், அடுக்குமாடி குடியிருப்புகளின் பொது பயன்பாட்டுக்கான மாற்றியமைக்கப்பட்ட மின் கட்டணம் நாளை (நவம்பர் 1) முதல் அமலுக்கு வரும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு இருக்கிறது.