கேரளாவில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
1 min read
Chance of heavy rain in Kerala for 2 days
3.11.2023
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அங்கு வருகிற 6-ந்தேதி வரை இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடுக்கி மற்றும் பத்தினம்திட்டா மாவட்டங்களுக்கு நாளை (4-ந்தேதி) ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு 115 முதல் 204 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் அன்றைய தினம் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கும், 5-ந்தேதி திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கும், 6-ந்தேதி திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.