July 6, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி அருகேவிஜிலென்ஸ் அதிகாரி என்று கூறி கல்லூரி மாணவியை திருமணம் செய்தவர் கைது

1 min read

Man arrested for marrying college student claiming to be vigilance officer near Tenkasi

3.11.2023
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே விஜிலன்ஸ் அதிகாரி என்று கூறி கல்லூரி மாணவியை ஏமாற்றி மூன்றாவதாக திருமணம் செய்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

திருமணம்

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள பட்டாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் காயத்ரி (வயது 27) கடந்த 2017 ஆம் ஆண்டு மதுரை தனியார் கல்லூரியில் படிக்கும் போது ரயிலில் தினமும் பயணம் செய்வது வழக்கம். அதே ரயிலில் பயணம் செய்த ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரநாச்சியார்புரம் பகுதியைச் சார்ந்த ராயப்பன் என்பவரது மகன் அருள் ராயன் (வயது 40) என்பவர் தன்னை விஜிலென்ஸ் அதிகாரி என்று கூறி காயத்ரியுடன் அறிமுகமாகியுள்ளார்.

அந்த அறிமுகம் காதலாக மாறி வீட்டிற்கு தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.அதன் பின்பு தனியாக மதுரை திருமங்கலம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருவரும் இரண்டு ஆண்டுகளாக குடும்பம் நடத்தியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து காயத்ரி தன்னை அருள்ராயன் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு பலமுறை வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் அருள்ராயன் தன்னை ஒரு பிசியான அதிகாரி போல காட்டிக் கொண்டு பல விதமான காரணங்களை கூறி தட்டிக் கழித்து வந்துள்ளார். இதனால் அடிக்கடி இருவருக்கும் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்ப்பட்டுள்ளது

அதன் பின்பு காயத்திரியை அவரது சொந்த உருவான பட்டாக்குறிச்சியில் விட்டுவிட்டு அருள்ராயன் மதுரைக்கு சென்று விட்டார். சில நாட்கள் கழித்து அருள்ராயன் காயத்திரியை சந்தித்து சமாதானமாக பேசி மீண்டும் மதுரை திருமங்கலத்திற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தியுள்ளார்.

அதன்பின்பு அருள்ராயன் மாதத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே காயத்திரி வீட்டிற்கு வந்து போவதை வழக்கமான ஒன்றாக வைத்துள்ளார்.

சந்தேகம்

இந்நிலையில் அருள்ராயன் உண்மையிலேயே விஜிலன்ஸ் அதிகாரி தானா என்று காயத்ரியின் குடும்பத்தாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
எனவே காயத்திரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அருள் ராயன் சொந்த ஊரான சுந்தரநாச்சியார்புரம் பகுதிக்குச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது அவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணம் நடைபெற்று உள்ளதாகவும் அவர் விஜிலென்ஸ் அதிகாரி இல்லை. என்பதும் தெரிய வந்துள்ளது. இதனால் காயத்திரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது பற்றி அருள்ராயனிடம் கேட்ட போது அருள்ராயன் ஆத்திரம் அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து காயத்ரி அப்பா மீது அருள்ராயன் தன்னிடம் 8 லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பொய் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் புளியங்குடி காவல் நிலையத்திற்கு காவல்துறையினர் விசாரணைக்கு இருதரப்பையும் அழைத்துள்ளனர் இருதரப்பும் வந்த நிலையில் அருள்ராயன் காயத்ரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தனக்கு கொள்ளை மிரட்டல் விடுத்ததாக காயத்ரி புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அருள்ராயனிடம் விசாரணை நடத்தினார் அப்போது அருள்ராயன் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து காவல்துறையின் விசாரணையில் அருள்ராயன் காயத்ரிக்கு கொலை மிரட்டல் விடுத்தது உண்மை என்பது தெரிய வந்தது உடனடியாக அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.