July 4, 2025

Seithi Saral

Tamil News Channel

படிக்கட்டில் பயம் செய்த மாணவனின் கால்கள் அகற்றம்- தி.மு.க. மீது பாஜக கண்டனம்

1 min read

Removal of feet of student who was afraid of stairs- DMK Condemned by BJP

18.11.2023
படியில் பயணம் நொடியில் மரணம் என்று அரசு பஸ்களில் எழுதி போட்டிருந்தாலும் படியில் பயணம் செய்வதே சாகச பயணம் என்பது போய் சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பஸ்களில் தொங்கிய படி பயணிப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்கள்.

அதிலும் படிக்கட்டுகளில் ஒருவர் மீது ஒருவர் பிடித்து கொண்டு சாகசம் செய்வது போல் பயணிப்பதை பார்ப்பவர்களே பதற்றப்படுகிறார்கள். கீழே விழுந்தால் என்ன நிலைமை என்று ஒவ்வொருவரும் ஆதங்கப்படுகிறார்கள்.

ஆனால் மாணவர்களோ எதையும் காதில் வாங்குவதில்லை. தங்கள் சாகச பயணத்தை தினமும் படிக்கட்டுகளில் நிகழ்த்தி வருகிறார்கள்.
குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரி நான்கு ரோடு சந்திப்பு அருகே சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த சில மாணவர்கள் காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளும் அவ்வழியாக செல்லும் அரசுப் பேருந்தில் ஆபத்தான நிலையில் படியில் தொங்கியபடி பயணம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்ததும் அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து ஒன்றின் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு வந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் சந்தோஷ் (16), பேருந்து குன்றத்தூர் தேரடி அருகே வந்த போது, திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தான். அப்போது, பேருந்தின் பின் சக்கரம் அவனது இரண்டு கால்கள் மீதும் ஏறி இறங்கியது. இதில், படுகாயமடைந்த மாணவனை பொதுமக்கள் உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத் தான நிலையில் மாணவன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாணவனின் இரண்டு கால்களும் பாதத்திற்கு கீழ் கடுமையாக சேதமடைந்து காணப்பட்டதால், அதனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். தொடர்ந்து மாணவன் சிகிச்சை பெற்று வருகிறான். எவ்வளவு அறிவுரை கூறினாலும், அதனை காதில் வாங்காததன் விளைவாக தனது இரண்டு கால்களையும் இழந்த மாணவன் சந்தோஷின், எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

நேற்று வரை துள்ளித் திரிந்த மாணவன் இன்று தனது இரு கால்களையும் பறிகொடுத்து முடமாகி இருக்கிறான். அவனது எதிர்காலமே இருண்ட காலமாக மாறியிருக்கிறது. இது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்து அல்ல. தானாக விலை கொடுத்து வாங்கிய விபத்து.

இந்த மாணவரை போல் தினமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கி ஆபத்தான முறையில் பயணிக்கிறார்கள். இந்த சம்பவத்தை பார்த்த பிறகாவது அவர்கள் திருந்த வேண்டும்.

பாஜக கண்டனம்

பேருந்து படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த அரசு பள்ளி மாணவனின் கால் துண்டாகி இருக்கும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மாணவர்களை தாக்கிய நடிகை ரஞ்சனாவுக்கு ஆதரவாக கருத்திட்டு உள்ளார் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி.

இது குறித்து எக்ஸ் தளத்தில் பாஜகவின் நாராயணன் திருப்பதி கூறியிருப்பதாவது:-
குன்றத்தூர் அரசு பள்ளியில் படித்து வந்த சந்தோஷ் என்ற மாணவன் நேற்று அரசு பஸ் படியில் தொங்கி பயணித்து இருந்து கீழே விழுந்ததால் பஸ்சின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியதால் கால்கள் நசுங்கி, செயலிழந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்து அகற்றபட்டன என சொல்லப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் குன்றத்தூர் அருகே கிருகம்பாக்கத்தில் படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்து கொண்டிருந்த மாணவர்களை கண்டித்ததோடு, அரசு பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரையும் எச்சரித்த பாஜகவை சேர்ந்த ரஞ்சனா நாச்சியார் என்ற பெண்மணியை, அவர் யார் கண்டிப்பதற்கு என்று கடுமையாக வசைபாடிய திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த அசம்பாவிதத்திற்கு பொறுப்பேற்பார்களா?

அல்லது அந்த பெண்மணியின் சமூக அக்கறையை பாராட்ட மனமில்லாமல், அந்த பெண்மணியை அதிகாலையில் வீட்டிற்கு சென்று கைது செய்த காவல்துறை, கால்களை இழந்த மாணவனின் துயர சம்பவத்திற்கு பொறுப்பேற்குமா? அல்லது ரஞ்சனா நாச்சியார் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு வேளைகளில் மாங்காடு காவல்நிலையத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டிய சூழ்நிலையினை ஏற்படுத்திய தமிழக அரசு இந்த மாணவனின் இழப்பிற்கு பொறுப்பேற்குமா?

அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பான பணி சூழல்! புதிய முயற்சியை முன்னெடுக்கும் யோகி ஆதித்யநாத் அரசு அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பான பணி சூழல்! புதிய முயற்சியை முன்னெடுக்கும் யோகி ஆதித்யநாத் அரசு

விதிமீறல்களை செய்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்காமல் மாணவர்களிடையே ஒழுக்கத்தை கொண்டு வர முனைந்த அந்த பெண்மணியின் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக குற்றம் சுமத்தி வழக்கு தொடுத்த மாநகர போக்குவரத்து கழகம், அதே விதி மீறல்களை செய்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்குமா? அல்லது இரு கால்களை இழந்த மாணவன் மீது தான் தவறு என்று தப்பிக்க பார்க்குமா? யாருக்கும் வெட்கமில்லை! எதற்கும் கவலையில்லை! எங்கும், எல்லாவற்றிலும் பாழும் அரசியல்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.