வாலாஜாபேட்டையில் சூரசம்ஹார விழா
1 min read
Surasamhara festival in Walajapet
19.11.2023
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுந்தர விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 13-ஆம் தேதி மிக பிரம்மாண்டமான முறையில் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது அதை முன்னிட்டு கோவிலில் பாலமுருகன் சுவாமிக்கு தொடர்ந்து ஐந்து நாட்கள் விசேஷ பூஜைகள் மற்றும் பல்வேறு வகையான அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து காட்சளித்தார்..
அதைத்தொடர்ந்து விழாவின் ஆறாம் நாளான இன்று காலையில் வள்ளி தேவசேனா ஸமேத சிவ சண்முக சுவாமிக்கு பல்வேறு வகையான 50 திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்று மஹா தீபாரதனை காட்டப்பட்டது பின்னர் மாலையில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெற்றது இதற்காக உற்சவர் சிவ சண்முக சுவாமி மயில்மேல் கம்பீரமாக ஆறுமுகங்களை கொண்டு கோவிலின் கிரிவலப்பாதையில் வலம் வந்து மூன்று தலை கொண்ட சூரபத்ம அசுரனை வேல் கொண்டு அழிக்கும் சூரசம்ஹாரம் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது பிறகு சுவாமி மங்கள மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது..
மேலும் நடைபெற்ற கந்த சஷ்டி சூரசம்கார விழாவில் 800-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு வேல் முருகா.. வேல் முருகா.. அரோகரா.. அரோகரா.. என கோஷங்களை எழுப்பியவாறு முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.
-செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்