September 16, 2024

Seithi Saral

Tamil News Channel

லண்டனில் ஒரு பாட்டில் விஸ்கி ரூ.23 கோடிக்கு ஏலம்

1 min read

A bottle of whiskey was auctioned for Rs 23 crore in London

20.11.2023
“ஸ்காட்ச் விஸ்கி” என பிரபலமடைந்துள்ள ஸ்காட்லேண்டு நாட்டின் விஸ்கி மது பானம் உலகெங்கும் பலரால் விரும்பப்படுபவை. இவற்றின் தரத்திற்காகவும் சிறப்பான சுவைக்காகவும், மதுபான பிரியர்கள் ஸ்காட்ச் விஸ்கிக்களை என்ன விலை கொடுத்தாவது வாங்குவது வழக்கம்.
மிக அரிதான பொருட்களை விற்க விரும்புபவர்களுக்கும் அவற்ற வாங்க விரும்புபவர்களுக்கும் இடையே ஏல முறையில் வர்த்தகம் நடத்தும் உலக புகழ் பெற்ற நிறுவனம், சாத்பீ’ஸ். பன்னாட்டு நிறுவனமான சாத்பீ’ஸ், அமெரிக்காவின் நியூயார்க் நகரை மையமாக கொண்டு உலகின் முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்நிறுவனத்தின் லண்டன் கிளையில், இரு தினங்களுக்கு முன், 1926 வருட மெக்ஆலன் ஆடமி சிங்கிள் மால்ட் விஸ்கி மதுபானம் சுமார் ரூ.22,48,89,885.00 கோடி ($2.7 மில்லியன்) தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த விஸ்கி, இதுவரை ஏலத்தில் விற்கப்பட்ட மதுபான வகைகளில் முன்னர் கிடைத்த தொகையை விட அதிகமாக ஏலம் விடப்பட்டு புதிய சாதனையை படைத்துள்ளது.

“இந்த ஒரு விஸ்கியைத்தான் உலகின் மது பிரியர்கள் ஏலத்தில் விற்கவும் விரும்புகின்றனர்; வாங்கவும் போட்டி போடுகின்றனர். இந்த மதுபானத்தின் சிறு துளியை நான் ருசி பார்க்க அனுமதிக்கப்பட்டேன். இது மிகவும் வளமையான விஸ்கி. எதிர்பார்த்ததை போலவே இதில் ஏராளமான உலர் பழங்கள் பயன்படுத்தப்பட்டு அவற்றின் திடம் சிறப்பாக உள்ளது” என இந்த ஏல நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜானி ஃபவுல் இதன் தரம் குறித்து கூறினார்.
இந்த விஸ்கி உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து சுமார் 60 வருட காலம் கருமையான ஓக் ஷெர்ரி பீப்பாய்களில் ஊற வைக்கப்பட்டது. அதன் பிறகு1986ல் இது பாட்டிலில் அடைக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் இது போன்ற விஸ்கி, மொத்தம் 40 மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது; ஆனால், இவை வெளிச்சந்தையில் விற்பனைக்கு வரவில்லை. இவற்றை தயாரித்த மெக்ஆலன் நிறுவனம் தங்களின் மிக முக்கிய வாடிக்கையாளர்களுக்கே இவற்றை அளித்துள்ளது.
40 பாட்டில்களையும் வெவ்வேறு வகையில் மெக்ஆலன் நிறுவனம் லேபிள் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால், வெவ்வேறு காலகட்டங்களில் இவை ஏலத்திற்கு வரும் போது, மிக அதிக தொகையை பெற்று தருகின்றன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.