செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
1 min read
Minister Senthil Balaji’s medical report to be submitted- Supreme Court orders
20.11.2023
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்்டில் வந்தது.
அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எடுக்கப்பட்ட எம்ஆர்ஐ அறிக்கை எங்கே என நீதிபதி திரிவேதி கேள்வி எழுப்பியுள்ளாார்.
செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி,” அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்களை தாக்கல் செய்துள்ளோம். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூளை எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை, கண்காணிப்பு தேவைப்படுகிறது” என்றார்.
மேலும், உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு தொடர்பான வழக்கை அடுத்த வாரம் நவம்பர் 28ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.