இந்திய அணி தோல்வி: விரக்தியில் 2 ரசிகர்கள் தற்கொலை
1 min read
Indian team’s defeat: 2 fans commit suicide in frustration
21.11.2023
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. இதில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர் முழுவதும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததை, இந்திய ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை.
பல ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். பெரும்பாலான ரசிகர்கள், இந்திய அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்லவே முடியாதா?… என தலையில் அடித்துக் கொண்டனர். இதற்கிடையே இரண்டு ரசிகர்கள் விபரீத முடிவை எடுத்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் பகுதியை சேர்ந்த தேவ் ராஜன் தாஸ் (23) என்ற ரசிகர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதேபோல் மேற்கு வங்காள மாநிலம் பெங்குரா பகுதியை சேர்ந்த ராகுல் லோகர் (23) என்ற ரசிகரும் தற்கொலை செய்து கொண்டார். இவர் போட்டி முடிந்த அன்று இரவு தனது அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தியாவின் தோல்வி இரண்டு இளம் உயிர்களை பறித்துள்ளது.
ரசிகர்கள் விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும். விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம். அதை உயிர்ப்போகும் அளவிற்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையிலும், இதுபோன்ற விபரீத முடிவு எடுக்கப்பட்டு வருவதுதான் துரதிருஷ்டவசமானது. வேதனைக்குரியது.