July 22, 2026

Seithi Saral

Tamil News Channel

செங்கோட்டையில் ஆர்.எஸ்.எஸ். பேரணி

1 min read

RSS in Red Fort Rally

21.11.2023
தென்காசி மாவட்டம் செங்கோட்டை வடக்கு ரதவீதி அப்பா மாடசாமி கோவில் முன்பு வீர வாஞ்சி திடலில் தென்காசி மாவட்ட ஆர்.எஸ்.எஸ். சார்பில் 98-ம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. ஐந்தருவி சுவாமி விவேகானந்தா ஆசிரமம் அகிலானந்த மகராஜ் பேரணியை தொடங்கி வைத்து பேசினார்.

பேரணியானது வடக்கு ரதவீதி, கீழ ரதவீதி, கே.சி. ரோடு, வண்டிமலைச்சி அம்மன் கோவில், சேர்வைகாரன் புதுத்தெரு, ஜவஹர்லால் ரோடு வழியாக வந்து அப்பாமாடசாமி கோவில் அருகில் நிறைவடைந்தது.

பின்னா் நடந்த பொதுக்கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட தலைவா் குருமூர்த்தி தலைமை தாங்கினார். கன்னியாகுமரி கோட்ட செயலாளா் ஜேதீந்திரன் சிறப்புரையாற்றினார். மாவட்ட பொறுப்பாளர் முருகேசன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்.,இந்து முன்னணி, பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா். பேரணியில் சுமார் 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனா்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *