இந்தியா சிறந்தவரின் கரங்களில் உள்ளது- பிரதமர் மோடிக்கு அமெரிக்க நடிகர் புகழாரம்
1 min read
India is in the hands of the best- American actor eulogizes PM Modi
28.11.2023
கோவாவில் 54-வது சர்வதேச திரைப்பட திருவிழா நடந்து வருகிறது. இதில், அமெரிக்க நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான மைக்கேல் டக்ளஸ் என்பவர் கலந்து கொண்டார்.
அவர் திரைப்பட திருவிழா மற்றும் பிரதமர் மோடியின் தலைமைத்துவ திறன்கள் ஆகியவற்றை பற்றி புகழ்ந்து பேசினார். அவர் கூறும்போது, “இந்த திரைப்பட திருவிழாவில், 78 வெளிநாடுகள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு உள்ளன. இதுவே, இந்த விழாவிற்கான தனித்தன்மையையும், அழகையும் காட்டுகிறது.
இது, உலகம் முழுவதும் அறியப்படுகிற மற்றும் புகழப்படுகிற உங்களுடைய இந்திய திரைப்படங்களின் வலிமையை பிரதிபலிக்கிறது. நீங்கள் சிறந்தவரின் கரங்களில் இருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்” என்றார்.
அவர் தொடர்ந்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி அனுராக் தாக்குரின் முயற்சிகளுக்கும் தன்னுடைய பாராட்டுதல்களை தெரிவித்து கொண்டார்.
கடந்த சில ஆண்டுகளாக திரைப்பட தயாரிப்புகள் மற்றும் அதற்கான நிதி செலவினம் ஆகியவற்றில் அதிகம் பணம் போடப்படுகிறது. அதனால், இது ஒரு வெற்றிக்கான தருணம் ஆகவும் உள்ளது என்று அவர் கூறியுள்ளார். இனம், மதம் மற்றும் பாலின வேற்றுமையின்றி மக்களை திரைப்படங்கள் ஒன்றிணைக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.