October 4, 2024

Seithi Saral

Tamil News Channel

இராணிப்பேட்டையில் உறுப்புகள் தானம் செய்த சிறுவனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

1 min read
The body of the boy who donated his organs was buried with state honors in Ranipet
30.1.2023
ஆற்காடு அடுத்த சர்வந்தாங்கலைச்  சேர்ந்த சிறுவன்  சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சிப் பலனின்றி     மூளைச்சாவாகி    உறுப்புகள் தானம் செய்ததையடுத்து  சிறுவனின் உடலுக்கு    அமைச்சர் காந்தி,ஆட்சியர் வளர்மதி  மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.



சிறுவன் சாவு

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த , சர்வந்தாங்கலைச்சேர்ந்த   கூலி தொழிலாளி.அருள் -பரிமளா தம்பதியரின் 2வது மகன் ராகவேந்திரா(வயது13) அங்குள்ள  அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். அவர.  கடந்த 18.ந்தேதி இரவு உறவினருடன் பைக்கில்  சென்ற போது     விபத்து ஏற்பட்டு   ராகவேந்திராவின் தலையில்  பலத்த காயமேற்பட்டது உடனே அவர்  அருகிலுள்ள   தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனிமதிக்கப்பட்டு  சிகிச்சைப் பெற்று வந்தார் இந்நிலையில்  நேற்று மருத்துவர்கள்   ராகவேந்திரா மூளைச்சாவடைந்துவிட்டதாக     பெற்றோரிடம் தெரிவித்து அவனது    உடல் உறுப்புகளை  தானம் செய்யுமாறு  எடுத்துரைத்தனர் அதற்கு   சம்மதம்  தெரிவித்ததைத் தொடர்ந்து  உறுப்புகளை தானமாகவழங்கப்பட்டது .
இதனையடுத்து  தமிழக அரசின்ஆணைப்படி  ராவேந்திராவின் உடல்  அவனது கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அரசுமரியாதையுடன் நேற்று அடக்கம் செய்யப்பட்டது  அப்போது சிறுவன் பெற்றோரிடம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி     ரூ.50ஆயிரம் வழங்கினார் உடனிருந்த   ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன்  ரூ25 ஆயிரத்தை  வழங்கி ஆறுதல் கூறினர்    அவர்களைத் தொடர்ந்து  மாவட்ட ஆட்சியர் வளர்மதி ராகவேந்திராவின் உடலுக்கு  மலர்வளையம் வைத்து  அஞ்சலி செலுத்தினார்   இவ்வரசுமரியாதையில்   வருவாய் அலுவலர் சுரேஷ், வட்டாட்சியர்,ஒன்றியக்குழுத்தலைவர்  புவனேஸ்வரி சத்தியநாதன் ஊராட்சிமன்றத் தலைவர்மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் 

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.