May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

ரஷியாவில் பெண்கள் 8-க்கும் அதிகமான குழந்தைகள் பெற்றுக் கொள்ள புதின் வலியுறுத்தல்

1 min read

ரஷிய அதிபர் புதின்

Putin urges women in Russia to have more than 8 children

1.12.2023
ரஷியாவில் பிறப்பு விகிதம் கடந்த 1990-ல் இருந்து குறைந்து வருகிறது. உக்ரைனுக்கு எதிராக சுமார் இரண்டு வருட போரில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ரஷியர்கள உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதையெல்லாம் கணக்கில் கொண்டு ரஷிய பெண்கள் 8 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். இதை நடைமுறையாக்க வேண்டும். அடுத்த 10 முதல் 20 வருடங்களில் ரஷியாவின் மக்கள் தொகையை உயர்த்துவதுதான் முக்கிய இலக்கு என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளா்.
மேலும் அவர் கூறியதாவது:-
நம்முடைய பல இனத்தினர் நான்கு, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளுடன் வலுவான பல தலைமுறை குடும்பங்களைக் கொண்ட பாரம்பரியத்தை பாதுகாத்து வருகின்றன.
ரஷிய குடும்பங்களில் ஏராளமான நம்முடைய பாட்டிகள், பாட்டியின் அம்மாக்கள் ஏழு, எட்டு மற்றும் அதற்கும் மேற்பட்ட குழந்தைகளை கொண்டிருந்தனர் என்பது நினைவில் கொள்வோம்.
இந்த சிறந்த பாரம்பரியத்தை பாதுகாத்து புத்துயிர் பெறுவோம். பெரிய குடும்பங்கள் நடைமுறையாகவும், ரஷியாவின் அனைத்து மக்களுக்கும் ஒரு வாழ்க்கை முறையாகவும் வேண்டும். குடும்பம் என்பது அரசு மற்றும் சமூகத்தின் அடித்தளம் மட்டுமல்ல, அது ஒரு ஆன்மிக நிகழ்வு, ஒழுக்கத்தின் ஆதாரம்.
ரஷியாவின் மக்கள் தொகையைப் பாதுகாத்தல் மற்றும் அதிகரிப்பது வரவிருக்கும் தசாப்தங்களுக்கு மட்டுமல்ல. தலைமுறைகளுக்கும் கூட என்பதுதான் இலக்கு.
இவ்வாறு அவர் கூறினார்.
ரஷியாவின் மக்கள் தொகை 2023 ஜனவரில் 1-ந்தேதி கணக்கின்படி 14 கோடியே 64 லட்சத்து 47 ஆயிரத்து 424 ஆகும். 1999-ம் ஆண்டு புதின் பதவி ஏற்றபோது இருந்ததைவிட இது குறைவானதாகும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.