Five state polls: MP, BJP in Rajasthan; Congress in Chhattisgarh. Win
30/11/2-023
5 மாநிலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. சிஎன்என் டிவி கணிப்பின் படி, ம.பி., ராஜஸ்தானில் பா.ஜ., ஆட்சியும், தெலுங்கானாவில் காங்கிரஸ் பிஆர்எஸ் இடையே இழுபறி நிலைமையும், சத்தீஸ்கரில் மீண்டும் காங்., ஆட்சியும் அமைய வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ம.பி., சட்டசபைக்கு கடந்த17-ந் தேதியிலும், சத்தீஸ்கர் சட்டசபைக்கு நவ.,7 மற்றும் 17-ந் தேதி இரண்டு கட்டங்களாகவும் ராஜஸ்தான் சட்டசபைக்கு நவ.,25 ல் ஒரே கட்டமாகவும், தெலுங்கானாவில் நவ.,30 ல் ஒரே கட்டமாகவும், மிசோரம் சட்டசபைக்கு நவ.,07 ல் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடந்து முடிந்தது.
இத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.
அதன் விவரம் வருமாறு:
சிஎன்என் நியூஸ் 18 டிவி வெளியிட்ட கருத்துக்கணிப்பு கூறியிருப்பதாவது:-
ம.பி.,யில் மீண்டும் பா.ஜ., ஆட்சி
பா.ஜ., -119 இடங்களிலும், காங்கிரஸ் -108 இடங்களிலும், மற்ற கட்சிகள்- 3 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
ராஜஸ்தானில் பாஜக
பா.ஜ.-111, காங்கிரஸ் -74, மற்ற கட்சிகள் -14 இடங்களிலும் வெற்ற பெற வாய்ப்பு உள்ளது.
தெலுங்கானா
காங்கிரஸ் -56, பிஆர்எஸ் -48, பா.ஜ.,-10, ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி- 10 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.இங்கு இழுபறி நிலை ஏற்படுகிறது.
சத்தீஸ்கர்
ஆளும் காங்.,-47, பா.ஜ.,-40, மற்ற கட்சிகள் -3 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
***************
ஜன்கிபாத் டூடே வெளியிட்ட கருத்துக் கணிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ராஜஸ்தான்
பா.ஜ.,- 100-122
காங்கிரஸ்- 62-85
மற்றவை- 15
மத்திய பிரதேசம்
பாஜ.,- 100-123
காங்கிரஸ்- 102-125
மற்றவை- 5
தெலுங்கானா
பிஆர்எஸ் : 40-45
காங்கிரஸ்- 48-64
பா.ஜ., - 7-13
ஏ.ஐ,எம்.ஐ,ஏம்- 4-7
மற்றவை- 1
சத்தீஸ்கர்
பாஜ., - 34-45
காங்கிரஸ்- 42-53
மற்றவை- 3
****************
ரிபப்ளிக் டிவி கருத்து கணிப்பு விவரம்
மத்திய பிரதேசம்
பா.ஜ.,-118-130
காங்., 97-1-7
மற்றவை2
சத்தீஷ்கர்
பா.ஜ., 34-42
காங்., 44-52
பி.எஸ்.பி. -0
*****************
டைம்ஸ் நவ் வெளியிட்ட கருத்துக்கணிப்பு
ராஜஸ்தான்
பா.ஜ.,- 108-128
காங்., 58-72
மற்றவை -13-21
***********
பி மார்க் கருத்துக்கணிப்பு
தெலுங்கானா
பி.ஆர்.எஸ். -37-51
பா.ஜ., - 2-6
காங்., 58-71
மற்றவை -1-1
சத்தீஷ்கர்
பா.ஜ. -35-42-
காங்., 46-54
மற்றவை-02
ராஜஸ்தான்
பா..ஜ., 101-125
காங்., 69-81
மற்றவை 5015
மத்திய பிரதேசம்
பா.ஜ., 103-122
காங்., 103-122
மற்றவை -3-8
********************
இந்தியா டுடே சி.என்.எக்ஸ் கருத்துக்கணிப்பு வருமாறு:
சத்தீஷ்கர்
பா.ஜ.,- 30-40
காங்., 46-56
மற்றவை -0
தெலுங்கானா
பி.ஆர்.எஸ்.., 31-47
காங்., 63-79
பா.ஜ- 2-4
மிசோரம்
ம்.என்.எப்.-14-18
இசட்பி.எம். - 12-16
காங்., 8-10
பா.ஜ., 02
இம்மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமையும் என கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.