June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆவுடையானூர் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

1 min read

Christmas party at Audayanur School

13.12.2023
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ, செல்வமோகன்தாஸ் பாண்டியன் கலந்து கொண்டார்.

பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி நிர்வாகி மோயீசன் அடிகளார் தலைமை வகித்தார்.முன்னாள் எம்.எல்.ஏவும். பள்ளியின் முன்னாள் மாணவருமான எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கிறிஸ்மஸ் விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார்.

ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்க ராஜன் (எ) கோபி, முன்னாள் தலைமை ஆசிரியர் மற்றும் நிர்வாக அலுவலர் அருள் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பள்ளி வளாகத்தில் குடில் – ஸ்டார் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கிறிஸ்து பிறப்பு நாடகம் மற்றும் நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அனைத்து மாணவ, மாணவிகளுக்கு கேக் வழங்கப்பட்டது,

முன்னதாக உதவித் தலைமை ஆசிரியர் ஹெலன் கெவின் வரவேற்றார். ஏற்பாடுகளை பள்ளியின் அறிவியல் மன்ற ஆசிரியர்களுடன், அனைத்து ஆசிரியர்களும் செய்திருந்தனர். முடிவில் தலைமை ஆசிரியர் சே.அந்தோணி அருள்பிரதீப் நன்றி கூறினார்.
முன்னதாக காலையில் நடைபெற்ற புனித அருளப்பர் நர்சரி-பிரைமரி மற்றும் ஆங்கில வழி பிரிவுகள் இணைந்து நடத்திய கிறஸ்துமஸ் விழாவிற்கு வெள்ளைபனையேறிப்பட்டி இந்து உயர்நிலைப்பள்ளி நிர்வாகி சுரேஷ் தலைமை வகித்தார். ஏற்பாடுகளை முதல்வர் முத்துலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *