June 17, 2024

Seithi Saral

Tamil News Channel

‘நீர்வழி படூஉம்’ நாவலுக்காக தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது

1 min read

Sahitya Akademi Award to Devi Bharathi for her novel ‘Neerahi Badooum’

20.12.2023
2023-ம் ஆண்டுக்கான 24 மொழிகளில் சிறந்த புத்தககங்களுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் சிறந்த நாவலாக ‘நீர்வழிப் படூஉம்’ தேர்வு செய்யப்பட்டு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 12-ம் தேதி விருதுகள் வழங்கப்பட உள்ளது.

தேவிபாரதி என்ற புனைப்பெயரில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ராஜசேகரன் எழுதிவருகிறார். கடந்த 40 ஆண்டுகளாக சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருகிறார். இவருடைய மூன்றாம் நாவல்தான் ‘நீர்வழிப் படூஉம்’. இந்நாவல், குடி நாசுவர் எனப்படும் சிறுகுடி மக்களின் வாழ்வியலையும் ஒரு தனிமனிதனின் வாழ்க்கையின் வீழ்ச்சியை, அவனுடன் சமூகம் கொள்ளும் உறவைப் பற்றி பேசும் நாவலாகும்.

சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று தேவி பாரதியின் மகள் நந்தினி கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.