June 17, 2024

Seithi Saral

Tamil News Channel

தூத்துக்குடியில் வெள்ளம்- தென்காசி தெற்கு மாவட்ட திமுக நிவாரணம்

1 min read

Flood in Thoothukudi- Tenkasi South District DMK relief

21.12.2023
தென்தமிழகத்தில் கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் கீழ்கண்ட முகாமில் உள்ள 3000 மக்களுக்கு நேற்று இரவு தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் தலைமையில திமுக நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அடிப்படை தேவையான உணவுகளையும், குடிநீர் பாட்டில்களையும் வழங்கினார்கள்.

அதன்படி ஸ்ரீ வைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக முகாமில் தங்கியுள்ள 500 நபர்கள், ஆழ்வார் திருநகரி இந்து மேல்நிலைப்பள்ளி முகாமில் தங்கியுள்ள 500 நபர்கள், ஆழ்வார் திருநகரி பெரியநம்பி திருமண மண்டபத்தில் தங்கியுள்ள 300 நபர்கள், ஆழ்வார்தோப்பு கிராமத்தில் 1000 நபர்கள்
ஸ்ரீவைகுண்டம் சமுதாய நலக்கூடம் முகாமில் தங்கியுள்ள 700 நபர்கள் ஆகியோருக்கு
அடிப்படை தேவையான உணவுகளையும், குடிநீர் பாட்டில்களையும் வழங்கினார்கள்.

இந்த நிவாரண மற்றும் உதவி செய்யும் பணியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் தலைமையில திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சேசுராஜன், கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர் ராஜேஷ்வரன், மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் தமிழ்ச்செல்வி போஸ், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்துக்குமார், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் பி.எஸ்.அண்ணாமலை, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜெ.கே.ரமேஷ், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் வளன் அரசு, மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ஜேம்ஸ்,தென்காசி யூனியன் துணை சேர்மன் கனகராஜ் ,மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சங்கீதா சுதாகர், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் திவ்யா மணிகண்டன்,மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சரஸ்வதி பாஸ்கரன், மாவட்ட பிரதிநிதி பொன் செல்வன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவகுமார்,மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் சுப்பையா பாண்டியன், ராமராஜ், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர்கள் ராமராஜ்,
முத்து சுப்பிரமணியன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் மாரிமுருகன்,சுந்தரபாண்டியபுரம் மாரியப்பன், சாம்பவர் வடகரை கோ.மாறன், சுரண்டை மகளிர் அணி சாந்தி, கலைச்செல்வி, பூங்கோதை, கல்பனா அன்னபிரகாசம், பத்மா, சுரண்டை நகர துணைச் செயலாளர்கள் பூல்பாண்டியன், சசிக்குமார், சுரண்டை நகர நிர்வாகிகள் ஏஜி.கணேசன், ஐஎம்கஏ. முத்துக்குமார், சுதன் ராஜா, கோமதிநாயகம், மாரியப்பன், பவுல்ராஜ், ஏ.கே. ராஜன், மாநில பேச்சாளர் வெல்டிங் மாரியப்பன், வடகரை சபிக், தென்காசி திருநாவுக்கரசு, தங்கப்பாண்டியன், சதீஷ், மது, கடையம் சசிகுமார், சுரேஷ், மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.