“அப்பன்” என்பது தவறான வார்த்தையா? – நிர்மலா சீதாராமனுக்குர் உதயநிதி பதில்
1 min read
Is father the wrong word? – Udayanidhi’s reply to Nirmala Sitharaman
23.12.2023
அப்பன்’ என்பது கெட்ட வார்த்தையா? தவறான வார்த்தைகளை நான் பயன்படுத்தவில்லை என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
உதயநிதி
தமிழகத்தில் மழை வெள்ளத்தின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கான மீட்பு பணிக்காக, மத்திய அரசிடம் தமிழக அரசு நிதி கோரியிருந்தது. அப்போது, மத்திய அரசு நிதி வழங்குவது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையானது. அவர் உங்க அப்பன் வீட்டு சொத்த.. தமிழகத்தி்ற்கு நிதி கொடுக்க வேண்டியதுதானே என்றார்.
இதற்கிடையில், டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், உதயநிதி ஸ்டாலின் பேசியது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த அவருக்கு உரிய மரியாதையை கொடுக்கத்தானே செய்கிறோம். அரசியலில் முன்னுக்கு வரவேண்டும் என நினைக்கும் அவருக்கு நல்லதல்ல. வகிக்கும் பதவிக்கு ஏற்ற அளவுக்கு வார்த்தைகள் அளந்து வரவேண்டும். இதை பொதுவாகவே சொல்கிறேன். அவர் மீது எந்த காழ்ப்புணர்வுடனும் இதை கூறவில்லை” என கூறினார்.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
பேரிடருக்கான நிதியை மட்டும்தான் கேட்டேன், நான் யாரையும் மரியாதை குறைவாக பேசவில்லை. பேரிடர் கால நிதி கேட்ட விவகாரத்தை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அரசியலாக்க முற்படுகிறார்.
அப்பன் என்பது கெட்ட வார்த்தையா? தவறான வார்த்தைகளை நான் பயன்படுத்தவில்லை.
9 ஆண்டுகால பாஜக ஆட்சியே மிகப்பெரிய பேரிடர் என்பதால், மழை வெள்ளத்தை தனியாக பேரிடராக அறிவிக்க மத்திய அரசுக்கு விருப்பமில்லை.
உன் தவறு, என் தவறு என குற்றச்சாட்டு கூறி எதையும் நான் அரசியலாக்க விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.