June 17, 2024

Seithi Saral

Tamil News Channel

தென்காசி: இறந்தவரின் உடலை இடுப்பளவு தணணீரில் சுமந்து சென்று அடக்கம்

1 min read

Tenkasi: The body of the deceased is carried in waist-deep water and buried

24/12/2023
தென்காசி மாவட்டம்
சுரண்டை அருகே அச்சன்குட்டம் ஊராட்சி லட்சுமிபுரம் பகுதியில் கனமழை காரணமாக இறந்தவரின் உடலை இடுப்பளவு தண்ணீரில் சுமந்து சென்று அடக்கம் செய்தனர்.

சுரண்டை அருகே உள்ள அச்சங்குட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் லெட்சுமிபுரம். இங்கு அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த பத்து குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என்று தனியாக சுடுகாடு எதுவும் இல்லை. வழக்கமாக இங்கிருந்து இறந்தவர் களின் உடலை, வீரகேரளம்புதூர் செல்லும் ரோட்டின் அருகே உள்ள குளக்கரையில் அமைந்துள்ள பஞ்சாயத்து கிணற்றுக்கு அருகில் எரித்து அடக்கம் செய்வது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், நேற்று காலையில் லெட்சுமிபுரம் பகுதியை சார்ந்த சின்னத்தம்பி என்பவரின் மனைவி மாடத்தி( வயது88) என்பவர் இறந்துவிட்டார். இவரை அடக்கம் செய்வதற்கு லட்சுமிபுரம் குளத்திற்கு நீர் செல்லும் ஓடையின் வழியாக இடுப்பளவு தண்ணீரில் சுமந்து சென்று, வழக்கமாக எரிக்கும் இடத்திலும் தண்ணீர் தேங்கி நின்றதால், சிறிது தொலைவில் உள்ள மேட்டில் எரித்து தகனம் செய்துள்ளனர்.
எனவே லட்சுமிபுரம் பகுதி மக்களுக்கு தனியாக சுடுகாடு வசதியும் அங்கு செல்வதற்கு சாலை வசதியும் செய்து கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.