May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை

1 min read

New Year celebration banned in Pakistan

29.12.2023
2023-ம் ஆண்டு முடிவடைந்து 2024-ம் பிறக்க இன்னும் இரண்டு நாட்கள்தான் உள்ளது. உலக நாடுகள் புத்தாண்டை வரவேற்க உள்ளன. நாளைமறுதினம் முதல் உலக நாடுகள் ஒவ்வொன்றாக புத்தாண்டை வரவேற்கும். நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள தீவுகள் புத்தாண்டை வரவேற்கும்.

இந்தியா ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் புத்தாண்டை கொண்டாட இருக்கிறது. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் அரைமணி நேரம் கழித்து புத்தாண்டு பிறக்கும். இந்த நிலையில் பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு காபந்து பிரதமர் அன்வாருல் ஹக் கக்கர் தடைவிதித்துள்ளார்.
இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர் “பாலஸ்தீனத்தின் துயரமான சூழ்நிலையை மனதில் வைத்து, நமது பாலஸ்தீன சகோதர, சகோதரிகளுக்கு ஒற்றுமையை காட்ட, புத்தாண்டு தொடர்பான எந்தவொரு நிகழ்ச்சியையும் நடத்துவதற்கு கடுமையான தடைவிதிக்கப்படும்.
விதிமுறை அனைத்தையும் மீறி இஸ்ரேல் படை 21 ஆயிரம் பாலஸ்தனீர்களை கொன்று குவித்துள்ளது. இதில் 9 ஆயிரம் குழந்தைகள் அடங்குவர். அப்பாவி குழந்தைகள் படுகொலை, காசா மற்றும் மேற்கு கரையில் ஆயுதமின்றியுள்ள பாலஸ்தீனர்கள் இனப்படுகொலை ஒட்டுமொத்த பாகிஸ்தான் மக்களையும், முஸ்லிம் உலகத்தையும் கவலையைில் ஆழ்த்தியுள்ளது ” என்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.