May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

73 குண்டுகள் முழங்க விஜயகாந்த் உடல் அடக்கம்

1 min read

Vijayakanth was cremated with 72 bombs

29.12.2023
தேமுதிக தலைவரும், நிறுவனருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது வீட்டிற்கு நேரில் சென்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார். தொண்டர்கள், ரசிகர்கள் அதிக அளவில் கூடியதால் தீவுத்திடலில் அவரது உடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி தேமுதிக தலைமையகத்தில் இருந்து அவரது உடல் இன்று காலை தீவுத்திடல் கொண்டு வரப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் மக்கள் கூடியிருந்து அஞ்சலி செலுத்தினர்.

காலை காலை 6 மணியளவில் தீவுத்திடல் கொண்டு வரப்பட்டு, விஜயகாந்த் உடல் அங்கு வைக்கப் பட்டது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். . மதியம் ஒரு மணி வரை உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது , பின்னர் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. வழிநெடுக மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். பலர் மாடியில் நின்றபடி மலர்களை தூவினார்கள். அதேபோல் கோயம்பேடு பாலத்தில் நின்றபடி தொடர்கள் மலர்தூவி வணங்கினார்கள். பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக இறுதி ஊர்வலம் தேமுதிக தலைமையகம் சென்றடைந்து, அங்கு 6.30 மணிக்கு இறுதி சடங்கு நடந்தது. தெலுங்கானா, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் இறுதி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து 72 துப்பாக்கி குண்டுகள் முழங்கி போலீஸ் மரியாதை செய்யப்பட்டது. அதன்பின் குடும்ப பழக்கபடி மகன்கள் இறுதி சடங்கு நடத்தினர். அதன் பின்னர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா மற்றும் மகன்கள் வணங்கினார்கள். இதனை அடுத்து விஜயகாந்த் உடல் குழிக்குள் இறக்கப்பட்டது. மனைவி, மகன்கள் மற்றும் உறவினர்கள் மலரையும் மண்ணையும் போட்டார்கள்.
இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றதால் குறிப்பிட்ட 4.30க்கு இறுதி ஊர்வலம் நிறைவடைய முடியவில்லை. அடக்கம் செய்யப்பட்ட தே.மு.தி.க. அலுவலகத்திற்கு உறவினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார். மற்றவர்கள் அனைவரும் வெளியில் திரளாக திரண்டு இருந்தனர். அவர்கள் செல்போனில் டார்ச் லைட்டை ஆன் செய்து மரியாதை செலுத்தினார்கள் மரியாதை செலுத்தப்பட்டது..

விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டு இருந்த ‘சந்தனப்பேழையில் “புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் ‘ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.