April 30, 2024

Seithi Saral

Tamil News Channel

2024-ம் ஆண்டு பற்றி நாஸ்டர்டாம்ஸ் கணிப்புகள்

1 min read

Nosterdams predictions about the year 2024

1.1.2024
எதிர்காலத்தை கணிக்கும் வல்லுனர்களில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நாஸ்டர்டாம்ஸ் மிக முக்கியமான நபராக கருதப்படுகிறார்.

இவர் 465 வருடங்களுக்கு முன் எழுதிய ‘லெஸ் ப்ரோபீடீஸ்’ புத்தகத்தில் கவிதைகளாக எப்போது என்னென்ன நடக்கும் என குறிப்பிட்டுள்ளாராம். இவரது கணிப்புகள் புரிந்து கொள்வதற்கு கஷ்டமாக இருக்கும். இவரை பற்றி ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு கூட இவரின் கணிப்புகள் சில சமயங்களில் கடினமாக இருந்தாலும் கூட இவரது ஏராளமான கணிப்புகள் உண்மையாகி இருக்கின்றன.

அந்த வகையில் அவர் 2024-ம் ஆண்டு என்னென்ன நடைபெறும் என சில கணிப்புகளை கணித்து தனது புத்தகத்தில் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதில், ஒரு கடற்படை போர் நடக்க வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது. மேலும் சிவப்பு நிறம் கொண்ட எதிரி தனக்கு இருக்கும் பயத்தால் பெரும் கடலை பயத்துக்கு உள்ளாக்குவார் என கூறியுள்ளார். இது தைவான் தீவுடனான சீனாவின் பதட்டத்தை சுட்டிக்காட்டுவதாக கூறப்படுகிறது.

இதேப்போல அவரது புத்தகத்தில் ஒரு பத்தியில், தீவுகளின் ராஜா பலத்தால் விரட்டப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. இது மூன்றாம் சார்லஸ் மன்னரை குறிப்பிடுவதாக சிலர் நம்புகிறார்கள்.

இதேபோல சார்லஸ் மன்னரை பற்றிய ஒரு பத்தியில், விரைவில் ஒரு பேரழிவு காரணமாக போர் நடக்கும். அது முடிந்த பின் புதிய ராஜா பதவி ஏற்பார். அவர் நீண்டகாலம் பூமியை பாதுகாப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீப ஆண்டுகளில் காலநிலை நெருக்கடி மிகவும் மோசமாக உள்ள நிலையில் 2024-ம் ஆண்டில் இது இன்னும் மோசமாகி விடும் என்று கணித்துள்ளார்.

அவரது கணிப்புகளில் இருந்து ஒரு பத்தியில், வறண்ட பூமி மேலும் வறண்டு வரும். அதன் விளைவாக பெரும் வெள்ளம் ஏற்படும். உலகின் பல நாடுகளில் வெள்ளம், காட்டுத்தீ ஏற்படும். அது பஞ்சத்திற்கு வழி வகுக்கும்.

செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் மனிதர்களை கட்டுப்படுத்த தொடங்கும். ஏஐ சாதனங்கள் மனிதர்களை ஆளும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவரது கணிப்பின்படி, உலகம் விரைவில் போப் பிரான்சிற்கு மாற்றாக புதிய போப்பை தேர்வு செய்யும். மிகவும் வயதான போப் ஆண்டவரின் மரணத்தின் மூலம், நல்ல வயதுடைய ஒரு ரோமன் அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் நீண்ட காலம் பதவியில் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.