May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழ்நாட்டில் 15 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது

1 min read

The temperature exceeded 100 degrees in 15 places in Tamil Nadu

29.4.2024
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி வெயில் வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக சேலம், ஈரோடு உள்ளிட்ட வட உள் மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் அதிகமாக உள்ளது.
அக்னி நட்சத்தரம் என்ற கத்தரி வெயில் தொடங்க இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், இப்போதே 110 டிகிரியை தொடும் அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருவதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் 15 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய இடங்கள் வருமாறு:-

ஈரோடு – 108.68, திருப்பத்தூர் – 107.6, சேலம் – 106.88, வேலூர் – 106.7, கரூர் பரமத்தி – 105.8, தருமபுரி – 104.9, திருச்சி – 104.54, மதுரை விமான நிலையம் – 104.36, திருத்தணி – 104.18, மதுரை நகரம், தஞ்சாவூர் – 104, கோவை – 103.64, நாமக்கல் – 102.2, பாளையங்கோட்டை – 101.3, மீனம்பாக்கம் – 100.4

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.