May 7, 2024

Seithi Saral

Tamil News Channel

தங்க வளையலை தூக்கிச்சென்று கூண்டில் வைத்திருந்த காகம்

1 min read

A caged crow carrying a gold bracelet

6.1.2024
கேரள மாநிலம் கோழிக்கோடு காப்பட் பகுதியை சேர்ந்த தம்பதி நசீர்-ஷரீபா. சம்பவத்தன்று இவர்கள் தங்களின் உறவினர் ஒருவரது திருமணத்துக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது நசீரின் மகளான ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி பாத்திமா ஹைபா தங்க நகைகள் அணிந்திருந்தார்.

திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்ததும் அணிந்திருந்த நகைகளை சிறுமி கழற்றினார். அவற்றில் 6 கிராம் எடையுள்ள தங்க வளையலை பேப்பரில் சுற்றி ஒரு பையின் மீது வைத்துள்ளார். நகையை பத்திரமாக வைக்குமாறு சிறுமியிடம் அவரது தாய் கூறியிருக்கிறார்.

ஆனால் சிறுமி தாய் கூறியதை கவனிக்காமல் தங்க வளையலை அங்கேயே வைத்துவிட்டார். இந்த நிலையில் 10 நாட்களுக்கு பிறகு உறவினரின் வீட்டுக்கு செல்ல நசீரின் குடும்பத்தினர் புறப்பட்டனர். அப்போது சிறுமியின் தங்க வளையல் இல்லாதததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
சிறுமியிடம் கேட்டபோது பேப்பரில் சுற்றி பையின் மீது வைத்ததாக கூறியிருக்கிறார். ஆனால் சிறுமி கூறிய இடத்தில் தங்க வளையல் இல்லை. தங்க வளையல் மாயமானதால் சிறுமியின் குடும்பத்தினர் வேதனையடைந்தனர்.

இந்நிலையில் ஷரீபாவின் உறவினரான சுலைகா மற்றும் பக்கத்து வீட்டு பெண் சாந்தா ஆகியோர் காகம் ஒன்று பிளாஸ்டிக் வளையலை தூக்கிச் சென்றதை பார்த்தனர். அது குறித்து ஷரிபாவிடம் தெரிவித்தனர். ஆகவே தங்களது தங்க வளையலையும் காகம் தூக்கிச் சென்றிருக்கக்கூடும் என்ற சந்தேகம் அவருக்கு எழுந்தது.

இதையடுத்து அவரது உறவினர் அகமது கோயா என்பவர், காகம் கூடு கட்டியிருந்த தென்னை மரத்தில் ஏறி பார்த்தார். அப்போது காக்கை கூண்டுக்குள் சிறுமியின் தங்க வளையல் இருந்தது. அதனை அவர் எடுத்து வந்து சிறுமியின் தாயிடம் கொடுத்தார்.

காணாமல் போன தங்க வளையல் கிடைத்ததால் சிறுமியின் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.