குற்றாலம் அருவிகளில் வெள்ளம்-4 நாளாக குளிக்க தடை
1 min read
Flooding at Courtalam Falls- Bathing prohibited for 3 days
7.1.2024
தென்காசி மாவட்டம் குற்றாலம் வனப்பகுதியில் இரவு நேரங்களில் பெய்து வரும் பலத்த மழையினால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு விளைவைத் தாண்டி தண்ணீர் விழுகிறது.பழைய குற்றாலத்தில் தடாகத்தை தாண்டி படிக்கட்டுகள் வழியாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.ஐந்தருவியில் ஐந்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது இதனால் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, புலியருவி சிற்றருவி ,உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடந்த இரண்டு நாட்களாக குளிக்க தடை விதிக்கப்பட்டது, இதனால் சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்
இன்று காலையில் தண்ணீர் ஓரளவு குறைந்த நிலையில் ஐந்தருவி புலியருவி சிற்றருவி ஆகிய அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர் மெயின் அருவி மற்றும் பழைய குற்றாலம் அருவியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கருதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவிகளின் பக்கம் சென்று விடாமல் தடுக்கும் வகையில் போலீசார் பள்ளத்தை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.