தோரணமலையில் தென் தமிழக அளவிலான யோகா- ஸ்கேட்டிங் போட்டி
1 min read
South Tamilnadu level yoga-skating competition at Thoranamalai
8.1.2024
தென்காசி மாவட்டம் தென்காசி கடையம் செல்லும் பாதையில் உள்ள
தோரணமலையில் நடைபெற்ற தென் தமிழக அளவிலான யோகா மற்றும் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் பரிசு வழங்கினார்.
லட்சியம் அசோசியேசன் சார்பில் தென் தமிழக அளவிலான யோகா மற்றும் ஸ்கேட்டிங் போட்டிகள் தோரணமலையில் நடைபெற்றது. தெட்சணமாற நாடார் சங்கத்தலைவர் ஆர்.கே.காளிதாசன் தலைமை வகித்தார். முத்தையா,சரஸ்வதி குத்துவிளக்கேற்றி வைத்தனர். டாக்டர் ஜெயகிருஷ்ணன் போட்டிகளை தொடங்கி வைத்தார். 25க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நடுவர்களாக பேராசிரியைகள் கயற்கன்னி, மதுமதி, சாந்தி, பாண்டிதேவி, கார்த்திகாபார்த்தீபன் ஆகியோர் செயல்பட்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. லட்சியம் அசோசியேசன் தலைவர் பாலகணேசன் அனைவரையும் வரவேற்றார்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி மாணவ, மாணவிகளை பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் கடையம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மகேஷ்மாயவன், மாவட்ட பிரதிநிதி பொன்செல்வன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், கடையம் பெரும்பத்து தொழிலதிபர் பரமசிவன், இலஞ்சி பேரூர் செயலாளர் முத்தையா, இளைஞரணி துணை அமைப்பாளர் சுப்பிரமணியன், நிர்வாகிகள் சண்முகநாதன், முத்துசுப்பிரமணியன், சுதன்ராஜா, சுதன் மற்றும பௌலின் சொர்ணலதா, ரவிக்குமார், ஞானசேகரன், செல்லத்துரை சிங், கிருஷ்ணன், ரேவதி ஆறுமுக செல்வன், வசந்தா மதிகணேசன், மதியழகன், நடராஜன், பிரபு, கே.ஆர்.பி. இளங்கோ,.டாக்டர் வில்சன் அருள் ஆனந்த், மயூரி, ரஞ்சித்சிங், குணசேகரன், தங்கமோகன்,ஜெர்லின்ஷீபா, முத்துகுமார், மாயி (எ) பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கவிதா பாலகணேசன் அனைவருக்கும் நன்றி கூறினார்.