May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

கடையம் வனப்பகுதியில் 30 ஆயிரம் விதைகள் தூவுதல் நிகழ்ச்சி

1 min read

30 thousand seeds sprinkling program in Kadayam forest area

11.1.2024

தென்காசி மாவட்டம் கடையம் வனப்பகுதிட்பட்ட சமூக காடுகளிலும் இராமநதி கால்வாயிலும் சுமார் 30000 நீர் மருது , பூவரசு விதைகள் தூவுதல் நிகழ்வு நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே தேசிய கழுகுகள் தினத்தை முன்னிட்டு கடையம்- சரஸ்வதி இன்ஸ்டிடியூட் ஆஃப் லைஃப் சயின்ஸ்,கடையம்- பனையான்மை மற்றும் இயற்கை தாய் நடுவம், பாட்டப்பத்து- கயல் அறிவியல் நிறுவனம் சார்பாக கடையம் வனப்பகுதிட்பட்ட சமூக காடுகளிலும் இராமநதி கால்வாயிலும் 100 கிலோ என சுமார் 30000 நீர் மருது , பூவரசு விதைகள் தூவுதல் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் ச.சுரேஷ் தலைமை தாங்கினர் .சரஸ்வதி இன்ஸ்டிடியூட் ஆஃப் லைஃப் சயின்ஸ்சின் முதன்மை விஞ்ஞானி முனைவர் ரா.மாரிச்செல்வம் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் ஜெயா வரவேற்று பேசினார்.

அதனை தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பங்களாதேஷில் உள்ள பெண்களுக்கான ஆசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானி பணிபுரியும் முனைவர் மோசே செல்வகுமார் வளர்ச்சி திட்டங்களுக்கா பல ஆண்டுகள் வளர்ந்த மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன அதனை‌ ஈடுகட்டும் விதமாகவும் சுற்றுச்சூழல் மேம்பட வேண்டும் என்பது குறித்தும் இந்த விதைகள் தூவுதல் நிகழ்வு அமைய‌ வேண்டும் என்று கருத்துரை‌வழங்கி விதைகள் தூவுதல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.‌ இறுதியாக இயற்கை ஆர்வலர் அனைவருக்கும் பழனிக்குமார் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.