May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் 1029 பேர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா-அமைச்சர் வழங்கினார்

1 min read

Patta-Minister gave free housing to 1029 people in Tenkasi district

11.1.2024

தென்காசி மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சிறப்பு பட்டா முகாம் மூலம் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்.

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சிறப்பு பட்டா முகாம் மூலம்பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை, இரவிச்சந்திரன் தலைமையில், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஈ.ராஜா ஆகியோர் முன்னிலையில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை இரவிச்சந்திரன் தெரிவித்ததாவது,

தென்காசி மாவட்டத்தில் தகுதியுடைய 1029 பயனாளிகளுக்கு ரூ.82 இலட்சத்து 57 ஆயிரத்து 324 மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஊராட்சித்துறை வட்டார அலுவலகங்கள் மூலம் பயனாளிகள் மனு அளித்தவுடன் ரூ.2,70,000/- மதிப்பில் வீடுகட்டிக் கொள்ள அனுமதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்ததாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு முழுவதும் இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்க ஆணையிட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஒரு இலட்சம்பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கஇலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முத்தமிழறிஞர் டாக்டர்

கலைஞர் மனதில் உதித்த திட்டம் தான் இலவசவீட்டு மனைப்பட்டா வழங்கும் திட்டம். தந்தை வழியில் நமதுமுதலமைச்சர் அவர்களும் மக்களின் அடிப்படைத் தேவையைபூர்த்தி செய்யும் வகையில் இத்திட்டத்தை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் தென்காசியில் மழையினால் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து நிவாரணத்தொகை ரூ. 1000/- வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் திட்டங்களை அனைவரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சரினா ஆணைக்கிணங்க, தென்காசி கோட்டத்தில் இலவச வீட்டுமனை வரன்முறை பட்டா ஆதிதிராவிடர் நத்தம்பட்டா, பிற்படுத்தப்பட்டோர் நத்தம் பட்டா என 191 பயனாளிகளுக்கு மொத்தம் 82,57,324/- மதிப்பிலான பயனாளிகளுக்கு பட்டா பட்டாக்களையும், 871 மாறுதல் (உட்பிரிவுள்ளது. உட்பிரிவற்றது) ஆதிதிராவிடர் நத்தம் பட்டா என மொத்தம் 1062 பயனாளிகளுக்கு பட்டாக்களையும், சங்கரன்கோவில் கோட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா வரன்முறை பட்டா ஆதிதிராவிடர் நத்தம்பட்டா, பிற்படுத்தப்பட்டோர் நத்தம் பட்டா என 29 பயனாளிகளுக்கு ரூ.4,66,186/-இலட்சம் மதிப்பிலான பட்டாக்களையும் 503 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் (உட்பிரிவுள்ளது. உட்பிரிவற்றது) பட்டாக்களையும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ. 13,500/- மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிளையும் 67601 மொத்தம் ரூ.87,37,010/- இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர் ராமச்சந்திரன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, வருவாய் கோட்டாட்சியர் (தென்காசி) லாவண்யா, வருவாய் கோட்டாட்சியர் (சங்கரன்கோவில்) சுப்புலெட்சுமி, சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி, ஒன்றியக்குழுத்தலைவர் சங்கரன்கோவில் லாலா சங்கரபாண்டியன், சங்கரன்கோவில் வட்டாடசியர் பாபு, தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர், தென்காசி நகர்மன்ற துணைத்தலைவர் கே.எல்.என்.சுப்பையா, தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வல்லம் மு.ஷேக் அப்துல்லா, துணைத்தலைவர் கனகராஜ் தென்காசி மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ரா.ராமசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.