June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழக அரசின் விருதுகள்- முதல்அமைச்சர் வழங்கினார்

1 min read

Tamil Nadu Government Awards- Presented by the Chief Minister

13.1.2024
தலைமைச் செயலகத்தில் தமிழக அரசின் விருதுகளை முதல்அமைச்சர் மு க ஸ்டாலின் இன்று வழங்கினார்.

2023ம் ஆண்டுக்கான விருதினை முதல்அமைச்சர் ஏற்கனவே அறிவித்தார். இந்த விருது வழங்கும் விழா இன்று நடந்தது. விழா சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது.
விழாவில் பங்கேற்ற முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி உள்ளார்.

விருது பெற்றோர் விவரம் வருமாறு:-
அய்யன் திருவள்ளுவர் விருது தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிக்கு வழங்கப்பட்டது .

பேரறிஞர் அண்ணா விருது பத்தமடை பரமசிவத்திற்கு வழங்க்கபட்டுள்ளது.

பெருந்தலைவர் காமராஜர் விருது .உ. பலராமனுக்கு வழங்கப்பட்டது.
மகாகவி பாரதியார் விருது கவிஞர் பழநிபாரதிக்கு வழங்கப்பட்டது.
பாவேந்தர் பாரதிதாசன் விருது எழுச்சிக் கவிஞர் ம. முத்தரசுக்கு வழங்கப்பட்டது.
தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது பேராசிரியர் எஸ். ஜெயசீல ஸ்டீபனுக்கு வழங்கப்பட்டது,

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது முனைவர் கருணாநிதிக்கு வழங்கப்பட்டது.

தந்தை பெரியார் விருது தமிழக அரசின் சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் சுப.வீரபாண்டியனுக்கு வழங்கப்பட்டது

டாக்டர் அம்பேத்கர் விருது பி. சண்முகத்திற்கு வழங்கப்பட்டது..

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.