தென்காசியில் மாவட்ட நீதிமன்றங்கள்துவக்க விழா
1 min read
Inauguration of District Courts in Tenkasi
14/1/2024
தென்காசியில் மாவட்ட நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி முன்னிலையில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா திறந்து வைத்தார்.
தென்காசியில் மாவட்ட நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நீதிமன்றம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப் பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்கா பூர்வாலா திறந்து வைத்து சிறப்புரை யாற்றினார்.இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிபதி சி.பி.எம்.சந்திரா வரவேற்று பேசினார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமார், இளங்கோவன், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், மூத்த வழக்கறிஞர் கனகசபாபதி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
நிகழ்ச்சிகளை தென்காசி முதன்மை சார்பு நீதிபதி மாரீஸ்வரி, செங்கோட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி சுனில் ராஜா, தென்காசி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பாஸ்கர் ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில் திருநெல்வேலி தலைமை குற்றவியல் மன்ற நீதிபதி எஸ்.மனோஜ் குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.
இந்த விழாவில் தென்காசி மாவட்ட நீதிபதி கருணாநிதி, மாவட்ட கூடுதல் நீதிபதி பத்மநாபன்,தென்காசி கூடுதல் மாவட்ட நீதிபதி அனுராதா, சார்பு நீதிபதி மாரீஸ்வரி முனிசிப் பாஸ்கர்
, குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி பொன் பாண்டி, சிவகிரி, சங்கரன்கோவில், ஆலங்குளம் நீதிமன்றங்களின் நீதிபதிகள்,
தென்காசி அரசு வழக்கறிஞர்கள் சு.வேலுச்சாமி, முருகன், மாரி குட்டி,தென்காசி பார் அசோசியேசன் தலைவர் செல்லத்துரை பாண்டியன், அட்வகேட் அசோசியேசன் தலைவர் எம்.ஆர்.கே.பாண்டிய ராஜ், பார் அசோசியேசன் செயலாளர் மாரியப்பன், அட்வகேட் அசோசியேசன் செயலாளர் புகழேந்தி, வல்லநாடு துளசி மகளிர் சட்டக் கல்லூரி முதல்வர் டாக்டர் எம்.இ.டி. முகமது,
முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் கார்த்திக் குமார், ராமச்சந்திரன், சின்னத்துரை பாண்டியன், சுப்பையா, தென்காசி மாவட்ட மூத்த வழக்கறிஞர்கள் கே.பி.குமார் பாண்டியன், அப்துல் மஜீத், ஜெகதீசன், மாடசாமி பாண்டியன், கைலாசம், வெங்கடேசன், மாடக்கண்ணு, நிசாந்த் கண்ணன், சின்னத்துரை பாண்டியன், தாஹிரா பேகம், தங்கராஜ் பாண்டியன் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கே. திருமலை, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஐயப்ப ராஜா, க.முத்துக்கிருஷ்ண குமரன், வழக்கறிஞர்கள் முருகையா பாண்டியன், தங்கத்துரை, ஆதி பாலசுப்பிரமணியன், மூர்த்தி, ராமலிங்கம், எம் ஆர் கே வேலு, அபு அண்ணாவி, ஆர்.மாடக்கண், மஞ்சு கிருஷ்ணா,ஐய்யப்பன்,
வாசுதேவநல்லூர் தங்கப்பழம் சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தென்காசி, திருநெல்வேலி மாவட்ட வழக்கறிஞர்கள் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.