June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

சிவகிரியில் புகையிலை பொருட்கள் கடத்திய 4 பேர் கைது – கார் பறிமுதல்

1 min read

4 arrested for smuggling tobacco products in Sivagiri – car confiscated

14.1.2024
தென்காசி மாவட்டம்,
சிவகிரியில் புகையிலைப் பொருட்களை காரில் கடத்திய ஒரு பெண் உட்பட நான்கு பேர்களை போலீசார் கைது செய்தனர்.கார் மற்றும் 40 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

சிவகிரி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் குட்கா போன்றவை கடத்தப்பட்டு
விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சிவகிரி காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமி தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். வள்ளி என்பவர் கடையில் சோதனை நடத்திய போது அங்கு காரில் கடத்தி வரப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்ட 110 புகையிலை பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை காருடன் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் புகையிலைப் பொருட்களை கடத்தி விற்பனை செய்ததாக கரடிகுளம் ஓடை தெருவை சேர்ந்த திருமலைக்கனி மகன் காளிராஜ் (வயது 37 ), அருணாசலம் மகன் ஜெயக்குமார் (வயது 28), சிவகிரி கோவிந்தன் கோவில்
தெருவை சார்ந்த பழனிச்சாமி மகன் கலைச்செல்வன் (வயது 30), கொத்தாடப்பட்டியை சேர்ந்த செல்லத்துரை மனைவி வள்ளி (வயது 29)ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *