தென்காசியில் ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
1 min read
Congress party protests against Governor in Tenkasi
29.1.2024
மகாத்மா காந்தி பற்றி அவதூறாக பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தென்காசியில் ஸ்.பழனி நாடார் எம்எல்ஏ தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய ஒற்றுமை யாத்தி ரையாக அசாம் மாநிலம் சென்ற ராகுல்காந்தியின் மீது அராஜகம் செய்து கொலை வெறிதாக்குதல் நடத்திய அசாம் மாநில பாஜவினரை கண்டித் தும், மகாத்மா காந்தியை அவ தூறாக பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை கண்டித்தும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார் பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடந்தது.
தென்காசி வணிகவரித் துறை துணை ஆணையர் அலுவலகம் முன்பு நடந்த கண்டன ஆர்ப் பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட தலைவர் எஸ்.பழனி நாடார் எம்எல்ஏ தலைமை தாங்கினார். தெனா்காசி மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் முரளி ராஜா.தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் ஆயிரப்பேரி தி.உதய கிருஷ்ணன், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னாள் செங்கோட்டை யூனியன் சேர்மன் சீவநல்லூர் ப.சட்டநாதன், நாகராஜன், ஆலங்குளம் செல்வராஜ். சங்கை கணேசன், மத்தளம்பாறை ஜெ.ஜேம்ஸ், மாநில நிர்வா சுக்குழு உறுப்பினர் டாக்டர் சங்கரகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர் அனைவரையும் வரவேற்று பேசினார். நகர காங்கிரஸ் தலைவர்கள் ராமர், பால்ராஜ், ஜெயபால், அபுதாஹிர், மாவட்ட துணை தலைவர்கள் சிவராமகிருஷ் ணன், சண்முகவேல், கிளாங்காடு மணி, முகம்மது உசேன் சமுத்திரம். குத்தாலிங்கம், மாவட்ட இலக்கிய அணி தலைவர் பால்துரை, துணை தலைவர் ஆலடி சங்கரய்யா, மாவட்ட மகளிர் காங் கிரஸ் தலைவி சேர்மக் கனி, எஸ்சி, எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் ராமச் சந்திரன், மனித உரிமை துறை மாவட்ட தலைவர் ராஜாராம். மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணி யன், ஒன்றிய கவுன்சிலர் முத்துக்குமார், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் குமார்பாண்டியன், மகா ராஜா, அன்வர் அலி, வட்டார காங்கிரஸ் தலைவர்கள் செங்கோட்டை கதிரவன் கார்வின் தென்காசி குற்றாலம் பெருமாள் ஜெகநாதன் கணேசன் மாவட்டச் செயலாளர்கள் பரமசிவன் இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் துணைத் தலைவர் ரமேஷ் மாவட்ட பொதுச் செயலாளர் சந்தோஷ் பண்பொழி மீரான் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமர் நகர் மன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணியன் செய்யது சுலைமான் தென்காசி நகர பொருளாளர் ஈஸ்வரன் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் தென்காசி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாடசாமி ஜோதிடர் அனைவருக்கும் நன்றி கூறினார்.