நிர்மலா சீதாராமன் மீது புகார் கூறிய ஜிஎஸ்டி துணை ஆணையா சஸ்பெண்ட்
1 min readGST Deputy Commissioner who complained against Nirmala Sitharaman suspended
30.1.2024
நிதிமந்திரி நிர்மலா சீதாராமனுக்கு எதிராக பேசிய தமிழகத்தைச் சேர்ந்த, ஐ.ஆர்.எஸ் அதிகாரி பாலமுருகனை பணியிடைநீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் தமிழ்நாடு, புதுச்சேரி மண்டல ஜி.எஸ்.டி. துணை ஆணையராக பதவி வகித்து வந்தார்.
சேலம் விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் ஐ.ஆர்.எஸ் அதிகாரி பாலமுருகன். இந்நிலையில், பாலமுருகன் நாளை ஓய்வு பெற இருந்த நிலையில், இன்று அவரை சஸ்பெண்ட் செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.