May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

ராமநதி ஜம்பு மேல்மட்ட கால்வாய் திட்ட பணிகள் துவக்கவிழா

1 min read

Inauguration of Raman Nadi Jambu Upper Canal Project

30.1.2024
தென்காசி மாவட்டத்தில் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகவும், காமராஜர் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டமான ராமநதி- ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்டம் சுமார் 60 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு நேற்று பூமி பூஜை நடைபெற்று பணிகள் தொடங்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தின் முக்கியப் பிரச்னைகளில் ஒன்றான ராமநதி -ஜம்புநதி இணைப்புக் கால்வாய் திட்டப் பணி நீண்ட ஆண்டுகளாக துவங்கப்படாமல் இருந்து வந்தது. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் 1962 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சி காலத்தில் ராமநதி, கடனா நதி அணை மற்றும் ஜம்மு நதி மேல்மட்ட கால்வாய் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 1974 ஆம் ஆண்டு இந்த அணைகளை தமிழக முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். ஆனால் ஜம்ப நதி கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது.

இந்த ஜம்புதி கால்வாய் திட்டம் என்பது ராமநதி அணையின் உபரிநீரை ஜம்பு நதியில் அமைந்துள்ள குத்தாலபேரி, நாராயணபேரி அணைக்கட்டுகளுக்கு கொண்டு வருவது ராமநதி- ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்டமாகும். 2015 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் ரூபாய் 42 கோடி மதிப்பில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவித்து40-லட்சம் ஆய்வு பணிக்கும் ரூ5-கோடி நிலம் கையகப்படுத்தவும் ஒதுக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

அவரது இறப்பை தொடர்ந்து இத்திட்டம் தாமதப்படுத்தப் பட்டது. அதன் பின்னர் திட்டத்திற்கு நபார்டு நிதி 41.08 கோடி பெறப்பட்டு நிலங்கள் கையகப்படுத்தப் படாமலேயேகால்வாய் வெட்டும் பணிக்கு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் பூமி பூஜையுடன் பணிகள் தொடங்கப்பட்டது.

அந்த சமயம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின்வெளி மண்டல பாதுகாப்பு பகுதியில் இந்த கால்வாய் செல்வதால் வனத்துறையின் தடையில்லா சான்று பெற்று திட்டத்தை தொடருமாறு வனத்துறையினர் இத்திட்ட பணிகளை நிறுத்திவிட்டனர்

இதனைத் தொடர்ந்து திமுக அரசு பொறுப்பேற்றவுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இத்திட்டத்தினை தொடர மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி வந்ததன் விளைவாக மாநில வன உயிரின நல வாரிய குழு மாற்றி அமைக்கப்பட்டு வனத்துறைக்கு மத்திய பரிந்துரைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் மத்திய வனத்துறை அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது.

இந்த நிலையில் நேற்று ராமநதி ஜம்பு நதி இணைப்பு கால்வாய் திட்டம் பணிகள் நடைபெறுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்
திருநெல்வேலி திட்டங்கள் வட்டம் கண்காணிப்பு பொறியாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் செயல்பாட்டு குழு அமைப்பாளர் இராம.உதயசூரியன் ஆகியோர் முன்னிலையில் திட்டத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் பழனிவேல், உதவி செயற் பொறியாளர் முத்து மாணிக்கம் உதவி பொறியாளர்கள் தங்க ஜெய்லானி, தினேஷ் ஒப்பந்ததாரர்கள் சார்பில் டோனிசொட்டு சுப்பிரமணியன் உதவியாளர் பவுன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த திட்டம் நிறைவேறும் பட்சத்தில் 25 குளங்கள் நிரம்பி , 4 ஆயிரத்து 50 ஏக்கர்
நிலம் பாசனம் பெறுகிறது. 729 கிணறுகள் செறிவுற்றப்படுகின்றன. கடையம் கீழப்பாவூர் ஒன்றியங்களில் பல நூறு கிராமங்கள் இதனால் பயனடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.