June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

நெல்லை தொகுதியில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ விருப்ப மனு

1 min read

S.Krishnamurali MLA’s nomination petition for Edappadi Palaniswami to contest in Nellai Constituency

23.2.2024
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி போட்டியிட வேண்டும் என்று கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ விருப்ப மனு கொடுத்துள்ளார்.

விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் அதிமுக தலைமை கழகத்தில் விருப்பம் மனு தாக்கல் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ.கிருஷ்ண முரளி (எ) குட்டியப்பா திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி போட்டியிட வேண்டும் என விருப்பம் மனு தாக்கல் செய்தார்.

அந்த விருப்ப மனுவினை செ‌.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ முன்னாள் அமைச்சர் உதயகுமாரிடம் வழங்கினார்.
அப்போது அவருடன் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.