June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆழ்வார்குறிச்சியில் திருவள்ளுவர் கழக சிறப்புக் கூட்டம்

1 min read

Thiruvalluvar Kazhagam special meeting at Alwarkurichi

23.2.2024
தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சியில் திருவள்ளுவர் கழகத்தின் 23 வது சிறப்புக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை முதன்மை முகாம் மேலாளர் மாணிக்கம் தலைமை தாங்கினார்.பணி நிறைவு தலைமையாசிரியை சுந்தரி இறை வாழ்த்து பாடினார். ஆழ்வார்குறிச்சி திருவள்ளுவர் கழக செயலாளர் நல்லாசிரியர் மாடசாமி அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஏ.என். லட்சுமி கவிதை வாசித்தார். சிறப்பு விருந்தினர் பாவலர் பாப்பாக்குடி முருகன் பண்பு பாராட்டும் உலகு என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியின் நிர்வாக அலுவலரும் கழக பொருளாளருமான சுந்தரம் சிறப்பு விருந்தினரைக் கௌரவித்து நன்றி கூறினார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை திருவள்ளுவர் கழக உறுப்பினர்களான வேம்பு, சைலப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ் செம்மல் நாராயணன், முனைவர் முருகன், கணபதி, பிஎஸ்என்எல் ஓய்வு அதிகாரி சைலப்பன், எல்ஐசி கண்ணன், அகவை முதிர்ந்த தமிழறிஞர் துரைராஜ், சுப்பிரமணியன், தபால் துறை ஓய்வு மாணிக்கம் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவில் சிறப்பித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *