December 8, 2024

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் ரூ.28.60 கோடியில் புதிய கட்டிடங்கள்- முதல்அமைச்சர் திறந்து வைத்தார்

1 min read

Chief Minister inaugurated new buildings in Tenkasi district at a cost of Rs 28.60 crore

26.2.2024
முதலமைச்சர் தென்காசி மாவட்டத்தில் ரூ.28 கோடியே 60 இலட்சம் மதிப்பிலான புதிய கட்டடங்கள் மற்றும் புதிய திட்டப்பணிகளை செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச்சாலை, நெம்மேலியில் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார்.

தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1கோடியே 67 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தினசரி சந்தையில் ஒரு சிற்றுண்டி மற்றும் ஒரு வணிகவளாகம், 19 சிறியகடைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் நகராட்சியில் ரூ.7 கோடியே 68 இலட்சம் மதிப்பீட்டில் காய்கறி சந்தை மற்றும் எலுமிச்சை சந்தை திறந்து வைக்கப்பட்டுள்ளது. காய்கறி சந்தையில் 54 கடைகளும், எலுமிச்சை சந்தையில் 20 கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
வடகரை கீழ்பிடாகை பேரூராட்சி 15வது நிதிக்குழு மானியத்தின் மூலம் ரூ..60 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆரம்பசுகாதார நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் அச்சன்புதூர் பேரூராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தின் மூலம் ரூ.18 கோடியே 65 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
தென்காசியில் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்.எம்.குமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, செங்கோட்டை நகர்மன்ற தலைவர் இராமலெட்சுமி, சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரிஇ சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியக் குழுதலைவர் லாலாசங்கரபாண்டியன், துணை இயக்குநர் (மக்கள்நல் வாழ்வுத்துறை) மரு.கோவிந்தன், செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் சுகந்தி, நகராட்சி பொறியாளர் முகைதீன், சங்கரன்கோவில் நகராட்சி ஆணையாளர் சபாநாயகம், வடகரை கீழ்பிடாகை பேரூராட்சி செயல் அலுவலர் தமிழ்மணி, வடகரை கீழ்பிடாகை பேரூராட்சித் தலைவர் ஷேக்தாவூத், உதவி செயற்பொறியாளர் திருச்செல்வம், அச்சன்புதூர் பேரூராட்சி செயல் அலுவலர் மோகன மாரியம்மாள், செங்கோட்டை நகர்மன்ற உறுப்பினர்கள் பேபிராஜபாத்திமா, இசக்கி துரைபாண்டியன், முகம்மதுரஹிம், இசக்கியம்மாள், முருகையா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா..இளவரசி, உதவிமக்கள் தொடர்பு அலுவலர் ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.